Annamalai : பாஜக என்ற ஒரே வண்டி தான் டெல்லி செல்லும்.! ஒரே டிரைவர் நான் தான் இருக்கிறேன் - அண்ணாமலை அதிரடி

By Ajmal Khan  |  First Published Apr 1, 2024, 9:05 AM IST

400 எம்பி களை தாண்டி மீண்டும் மத்தியில் மோடி அமர வேண்டும் என தெரிவித்த அண்ணாமலை, மோடி எந்த முடிவு எடுத்தாலும் நாடாளுமன்ற எம்பிக்கள் தேவைப்படுகிறார்கள். நாட்டில் கடந்த 70 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத பல விஷயங்கள் இந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட்டதாக கூறினார். 


400 எம்பிக்களை தாண்ட வேண்டும்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில் கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து பிரச்சாரத்தை துவக்கிய அவர்,  பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை,  

Tap to resize

Latest Videos

இந்த நாடாளுமன்ற தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல்.10 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வையின் எழுச்சியை காட்டுகிறது. பிரதமர் மோடி 400 எம்பி களை தாண்டி மீண்டும் மத்தியில் அமர வேண்டும். மோடி எந்த முடிவு எடுத்தாலும் நாடாளுமன்ற எம்பிக்கள் தேவைப்படுகிறார்கள். நாட்டில் கடந்த 70 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத பல விஷயங்கள் இந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட்டதாக கூறினார். 

அடுத்த 5 ஆண்டுகள் முக்கிய காலம்

எனவே இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு பிரதமர் மோடியை மீண்டும் அமர வைக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியாளர்களே இல்லையென கூறினார். 2024 முதல் 2029வரையிலான காலம் மிக முக்கியமானது என தெரிவித்த அண்ணாமலை, வளரும் இந்தியா, வளர்ந்த இந்தியாவாக மாறப்போகிறது.  கோவையை பொருத்தவரை கடந்த 20 ஆண்டுகளாக வளர்ச்சி தொய்வில் இருக்கிறது.  கம்யூனிஸ்ட் கட்சி எம்பியால் கோவை வளர்ச்சி பின் நோக்கி சென்றுள்ளது.1440 கோடி மதிப்பிலான ஸ்மாட் சிட்டியை ஒழுங்காக செயல்படுத்தப்படுகிறதா என்பதை பார்க்க கூட ஆள் இல்லை. உங்கள் தம்பி அண்ணாமலை அன்பை கோருகிறேன். கோவையை அடுத்தக்கட்டம் கொண்டு செல்வதற்கு தான் நான் போட்டியிடுகிறேன்.

டெல்லிக்கு வண்டி புறப்பட்டு விட்டது

எனவே இப்போது நடக்கவில்லையென்றால், எப்போதும் நடக்காது. மாற்றம் இப்போதே தொடங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த வண்டி தான் டெல்லி போகின்ற வண்டி. அண்ணாமலை என்கின்ற ஒரே டிரைவர் தான் இருக்கிறேன். வேறு யாரும் இல்லை என தெரிவித்தார்.  பிரதமர் யார் வருகிறார்கள் என்பதற்கான தேர்தல் இது,

2026ஆம் ஆண்டு திருப்பூருக்கு செல்வதும், சென்னை செல்வது பற்றி முடிவு எடுக்கலாம் என தெரிவித்தார். அதனால் ஒரே ஒரு வண்டி மட்டுமே டெல்லி செல்ல புறப்பட்டுள்ளது. நான் டிரைவராக அமர்ந்துள்ளேன். எனவே மற்ற கட்சிகளை பற்றி பேசவில்லையென என கூறினார். மோடி மீண்டும் வந்தால் வளர்ந்த இந்தியாவை பார்க்க போகிறோம் என அண்ணாமலை தெரிவித்தார். 

click me!