சசிகலா, ஓபிஎஸ் ஒன்று சேரணும்.. எடப்பாடியாரை வெளியேற்றனும்.. பொளந்து கட்டிய புகழேந்தி..!

By vinoth kumarFirst Published Oct 29, 2021, 2:44 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அடைந்த படுதோல்விக்கும் எடப்பாடி பழனிசாமிதான் முழு காரணம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்துள்ளதை பாராட்டுகிறேன்.

அதிமுக மீண்டும் எழுச்சிபெற வேண்டும் என்றால் அனைவரும் சசிகலாவுடன் ஓரணியில் பயணிக்க வேண்டும் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அதிமுகவை விமர்சித்து இருந்தார். இதனால், அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி, ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வது, தேர்தல் தோல்விக்கு பின் மற்றவர்களை விமர்சனம் செய்வது பாமகவின் வாடிக்கையாக உள்ளது என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டார்.  

இதையும் படிங்க;- எங்கு அபயக்குரல் கேட்டாலும் கந்தன்போல் அங்கு முதல்வர் காட்சி தருவார்.. அமைச்சர் சேகர்பாபு வேற லெவல்!

இதனையடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.அலிசியாமுன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரர் புகழேந்தி மட்டும் ஆஜராகியிருந்தார். இதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க;- தீபாவளிக்கு பிறகு கொரோனா பாதிப்பு உயர வாய்ப்பு? முதல்வருக்கு அலர்ட் மெசேஜ் கொடுக்கும் ஓபிஎஸ்..!

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி;- அதிமுக மீண்டும் எழுச்சிபெற அனைவரும் சசிகலாவுடன் ஓரணியில் பயணிக்க வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்க அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் தென்மாவட்ட மக்கள் அதிமுக மீது வெறுப்புணர்ச்சியுடன் உள்ளனர்.

இதையும் படிங்க;- ஆளுநரை பார்த்து அஞ்சு நடுங்க ஸ்டாலின் ஒன்னும் எடப்பாடியார் இல்லை.. பீட்டர் அல்போன்ஸ் அதிரடி சரவெடி..!

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அடைந்த படுதோல்விக்கும் எடப்பாடி பழனிசாமிதான் முழு காரணம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்துள்ளதை பாராட்டுகிறேன். தற்போதைய திமுக அரசு மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் இப்போதுதான் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்.

கட்சிக்குள் எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு முழு அதிகாரமும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே உள்ளது. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும். அதற்கு சசிகலா அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் அல்லது சசிகலா ஆகிய இருவரில் ஒருவரது தலைமையின் கீழ் அதிமுக வரவேண்டும். அப்படி இல்லை என்றால் அதிமுக அழிவை நோக்கி செல்லும் என புகழேந்தி எச்சரித்துள்ளார். 

click me!