இல்லம் தேடி கல்வி திட்டம்.. இரு தினங்களுக்கு முன்பு எதிர்ப்பு.. இன்று சரண்டர்.. DMK கூட்டணியில் நடந்தது என்ன?

By vinoth kumarFirst Published Oct 29, 2021, 1:58 PM IST
Highlights

இல்லம் தேடி கல்வித்திட்டத்தை விளக்கி தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை மதிப்புமிக்கதாகும். இந்தத் திட்டத்தில் சங்பரிவார் கும்பல் ஊடுருவி பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சை விதைக்கும் விபரீதம் ஏற்படக் கூடும் என்பதை கருத்தில் கொள்ளுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது.

தமிழக அரசு முன்வைத்துள்ள உன்னத நோக்கங்களுக்கு ஏற்ப இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுமானால், அத்திட்டம் வெற்றி பெற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஒத்துழைப்பை வழங்கும் என முத்தரசன் தெரிவித்துள்ளார். 

கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்பித்தல் மற்றும் கற்றல் பாதிப்புகளை தன்னார்வலர்கள் கொண்டு மேம்படுத்தும் திட்டமே ‘இல்லம் தேடி கல்வி திட்டம் ஆகும். பள்ளிக்கல்வித்துறை சார்பில் "இல்லம் தேடி கல்வி" என்கிற திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும். இது முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்தத் திட்டத்துக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுகவுடன் ஒத்த கருத்துள்ள திராவிடர் கழகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதேபோல், திமுக கூட்டணி கட்சிகயான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இல்லம் தேடி கல்வி திட்டம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். தனது ஷாகாக்கால் மூலம் சங்பரிவார் ஊடுருவி பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சை விதைக்கும் விபரீதம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நீண்ட விளக்கத்தை அளித்திருந்தார்.இதனையடுத்து, தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள உன்னத நோக்கங்களுக்கு ஏற்ப இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுமானால், அத்திட்டம் வெற்றி பெற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஒத்துழைப்பை வழங்கும் என முத்தரசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இல்லம் தேடி கல்வித்திட்டத்தை விளக்கி தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை மதிப்புமிக்கதாகும். இந்தத் திட்டத்தில் சங்பரிவார் கும்பல் ஊடுருவி பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சை விதைக்கும் விபரீதம் ஏற்படக் கூடும் என்பதை கருத்தில் கொள்ளுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு, 86,550 பேர் இத்திட்டத்தில் பணியாற்றப் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களின் செயல்பாடு கல்வியாளர்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும் என்றும், அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாகத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் தெளிப்படுத்தியிருக்கிறார்.மேலும் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மாநிலக் கல்விக் கொள்கையை வகுத்திட கல்வியாளர்கள் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

“கல்வி சிறந்த தமிழ்நாட்டில்”, இன்னும் கூடுதலாக ஒரு லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவதை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கி, அதில் சொல்லப்பட்டுள்ள விபரங்கள் குறித்து விழிப்புடன் இருப்பதாக விளக்கம் தரும் பொறுப்புணர்வு மெச்சத்தக்கதாகும். தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள உன்னத நோக்கங்களுக்கு ஏற்ப இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுமானால், அத்திட்டம் வெற்றி பெற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஒத்துழைப்பை வழங்கும் என்பதைத் தெரிவிக்கிறோம் என முத்தரசன் தெரிவித்துள்ளார். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு இரு தினங்களுக்கு முன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திடீரென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

click me!