ஜெ.வின் போயஸ் கார்டன் வீடு விற்பனைக்கா? தீபா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு ..!

By vinoth kumar  |  First Published Sep 6, 2022, 6:45 AM IST

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை விற்பனை செய்ய ஜெயலலிதாவின்அண்ணன் மகள் ஜெ.தீபாவும், தீபக்கும் முடிவு செய்து இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


சசிகலா உள்ளிட்ட யாரும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு உரிமை கோர முடியாது என ஜெ.தீபா கூறியுள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை விற்பனை செய்ய ஜெயலலிதாவின்அண்ணன் மகள் ஜெ.தீபாவும், தீபக்கும் முடிவு செய்து இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ஜெ.தீபா மற்றும் தீபக் இருவருமே திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக ஜெ.தீபா வௌியிட்டுள்ள ஆடியோவில்;- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு விற்பனைக்கு இல்லை. இந்த வீடு எனது பாட்டியால் கட்டப்பட்டது. அதன் பிறகு எனது அத்தைக்கு அவர் இந்த வீட்டை கொடுத்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சசி-பன்னீர் திட்டத்தில் மண்ணைப் போட்ட ஐகோர்ட்.. வருவதாக சொன்ன 30 தலைகள் ஜகா.. களமிறங்கிய இபிஎஸ்.

undefined

நாங்கள் எங்கள் சிறு வயதில் அந்த வீட்டில் வளர்ந்துள்ளோம். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு எங்களது பூர்வீக சொத்து. இதை நாங்களே பராமரித்துக் கொள்வோம். சசிகலா உள்ளிட்ட யாரும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு உரிமை கோர முடியாது. எனக்கு என் அத்தை மட்டும்தான் முக்கியம். அவருடன் யார் இருந்தார்கள், யாரெல்லாம் வந்தார். போனார் என்பதெல்லாம் எனக்கு தேவையில்லை. எனது அத்தை பல பிரமிக்கத்தக்க பெரிய பொறுப்புகள் மற்றும் பதவிகளை வகித்தவர். பல இடங்களுக்குச் சென்று பயணித்தவர். அதனால், அவருக்கு உதவி செய்ய ஆலோசனை அளிப்பதற்கு அவருடன் ஆயிரக்கணக்கானவர்கள் உடன் இருந்திருப்பார்கள்.

அதற்காக அவர்கள் எல்லோரும் போயஸ் கார்டனை உரிமை கோர முடியாது. குடும்ப உறுப்பினரும் ஆக முடியாது. எனது அத்தையுடன் பயணித்ததாகச் சொல்லும் சசிகலாவுக்கும் இது பொருந்தும். தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம். இது எங்களின் அமைதியை கெடுத்து, தேவையற்ற அழுத்தத்தை எங்களுக்கு கொடுக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க;-  அண்ணாமலையை பார்த்து நடுநடுங்கி அச்சத்தில் உளரும் ஆர்.எஸ் பாரதி.! கைவைத்து பாருங்கள் வேதனைப் படுவீர்கள்- பாஜக

click me!