மார்ச் 20 , நினைவிடத்தில் அரசியல் முடிவை அறிவிக்கிறார் சசிகலா.? உற்சாகத்தில் ஆதரவாளர்கள்.. அலறும் இபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Mar 16, 2022, 11:37 AM IST
Highlights

 ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.பி ராஜா சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென் மாவட்டங்களில் சசிகலாவே அதிமுகவுக்கு  தலைமை ஏற்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகிறது. 

தனது கணவரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தனக்கும் அரசியல் ஆசானாக இருந்த மா. நடராசனின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் சசிகலா தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 20 ஆம் தேதி கணவர் நடராஜனின் நான்கு ஆண்டு நினைவு நாளில் தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் நேரில் அஞ்சலி செலுத்தி விட்டு அடுத்த கட்ட நவடிக்கை குறித்து சசிகலா மௌனம் கலைய உள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது. இது அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜா ஆணி, ஜெ அணி என இரண்டு அணிகளாக அதிமுக உடைந்தது. அதுமட்டுமின்றி எம்ஜிஆர் மறைந்தவுடன் ஜெயலலிதாவை  முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமையாக முன்னிறுத்தும் பணிகளை திரைக்கு மறையில் இருந்து இயக்கியவர் சசிகலாவின் கணவர் மா. நடராசன் என்பது அனைவரும் அறிவர். இரண்டு அணியாக உடைந்த அதிமுகவில்  பல மூத்த தலைவர்கள் ஜெயலிதாவை ஆதரிக்க காரண கர்த்தராக இருந்நவரும் மா. நடராசன்தான். அரசியல் காய்களை எப்படி நகர்த்த வேண்டும்,  எப்போது என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும், யாருடன் எப்படி கைக் கோரிக்க வேண்டும், யாரை எப்போது கழட்டி விட வேண்டும் என அத்தனை தந்திரத்திலும் ஜெயலலிதாவுக்கும் மூலையாக செயல்பட்டவர்தான் நடராஜன்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் 168 க்கும் மேற்பட்டோர் ஜிகாதி படுகொலை... பகீர் கிளப்பிய அர்ஜூன் சம்பத்.

இதனால்தான் ஜெயலலிதாவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் ஒருகட்டத்தில் ஜானகி ஜெயலிதாவிடம் மொத்தமாக கட்சியை ஒப்படைத்து விட்டு அரசியலை விட்டே ஒதுங்கி விட்டார். அந்த அளவிற்கு துல்லியமாக அரசியல் கணக்கு போடக் கூடியவர் மா. நடராசன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற நேரத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மா.நடராசன் உயிரிழந்தார். அவரது மறைவு அதிமுகவுக்கு பெரும் இழப்பாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடராசனின் நான்காம் ஆண்டு நினைவு நாள் வரும் 20ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் அவரது நினைவிடத்தில் நேரில் சென்று சசிகலா அஞ்சலி செலுத்த உள்ளார். சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் கட்சியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இதுவரை பெரிய அளவில் முன்னெடுப்புகள் இன்றி மோனமாக இருந்து வருகிறார்.

இதுவரை அவர் மௌனத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இனி எப்போதுதான் சசிகலா தனது அதிரடி ஆட்டத்தை துவங்க போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில்தான் தென்மண்டல மத்திய மண்டலம் மற்றும் டெல்டா பகுதிகளில் சுற்றுப்பயணம் முடித்துள்ள அவர்  அடுத்து கொங்கு மண்டலத்திற்கு சென்று தனது ஆதரவாளர்களை சந்திக்கவுள்ளார். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.பி ராஜா சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென் மாவட்டங்களில் சசிகலாவே அதிமுகவுக்கு  தலைமை ஏற்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகிறது. சிறையிலிருந்து விடுதலையாகி ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையிலும்  சசிகலா மௌனமாக இருந்து வருவது அவரது தொண்டர்கள் மத்தியில் பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியுடன் ஆசை தீர உல்லாசம்.. ஆந்திராவில் வைத்து தூக்கிய போலீஸ்..!

இந்நிலையில்தான் தனது கணவரும்  தனது அரசியல் ஆசானுமான நடராஜன் நினைவிடத்தில் வைத்து சசிகலா தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது.  சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பமும் நடராஜன் நினைவிடத்திற்கு வருகைதர உள்ளனர். சாதாரண மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியைத் தொடர்ந்து தேசிய அளவில் அத்வானி, நரசிம்ம ராவ் என பலரின் நட்பைப் பெற்றவர் மா.நடராசன் ஆவார், எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அரசியலை விட்டு ஒதுங்க முடிவெடுத்த ஜெயலலிதாவை  பக்குவப்படுத்தி, அரசியல்பால் ஈர்த்தவர் மா. நடராசன், ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அரசியல் ஆசானாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

click me!