தமிழகத்தில் 168 க்கும் மேற்பட்டோர் ஜிகாதி படுகொலை... பகீர் கிளப்பிய அர்ஜூன் சம்பத்.

Published : Mar 16, 2022, 10:54 AM ISTUpdated : Mar 16, 2022, 11:04 AM IST
தமிழகத்தில் 168 க்கும் மேற்பட்டோர் ஜிகாதி படுகொலை... பகீர் கிளப்பிய அர்ஜூன் சம்பத்.

சுருக்கம்

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் படத்தை பார்த்தார். அவருடன் சென்னை மாமன்ற உறுப்பினரான உமா ஆனந்தன் படத்தை பார்த்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத், 1990 க்கு முற்பகுதியில் காஷ்மீரில் மதம்மாறச் சொல்லி இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இந்த படம் காட்சிப்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் இதுவரை 168 க்கும் மேற்பட்டவர்கள் ஜிகாதி படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பகீர் தெரிவித்துள்ளார். அதேபோல் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் இந்த படுத்திறகு பிறகாவது ஜாகாதி படுகொலைகள் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் பெரும்பாலான திட்டங்கள்  இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக உள்ளதாக கூறி பாஜக போராட்டங்கள் நடந்து வருகிறது. அதேபோல் இஸ்லாமியர்கள் அதிகம் வாழக்கூடிய காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் " தி காஷ்மீர் பைல்ஸ்"  என்ற திரைப்படம் வெளியாகி நாடு முழுவதும் குறிப்பாக பாஜக மாநிலங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் திரைப்படம் குறித்து தமிழகத்தில் பெரிய அளவில் பேச்சுக்கள் எழவில்லை.

இதையும் படியுங்கள்:ஆளுநருக்கு எதுக்கு வேந்தர் பதவி.? அதை கல்வி அமைச்சருக்கு கொடுங்க.. திமுக அரசுக்கு ஐடியா தரும் கூட்டணி கட்சி!

இந்நிலையில் பாஜக மற்றும் இந்துத்துவா தலைவர்கள் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து விட்டு ஆஹா ஓஹோ என விமர்சித்து வருகின்றனர். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த படத்திற்கு வரிச் சலுகை அளிக்ப்பட்டுள்ளதுடன், அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன்  கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 1990களின் முற்பகுதியில் காஷ்மீரில்  நடந்த தாக்குதலில் அங்கிருந்த பண்டிட்டுகள் எப்படி வெளியேற்றப்பட்டார்கள் என்பதை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. பூர்வ குடிகளான பண்டிட்டுகள் மீதான தாக்குதல், அதன்பிறகு அங்கு ஏற்பட்ட அரசியல் போன்றவற்றை இந்தப்படம் பேசியுள்ளது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் படம் உருவாகியுள்ளது. அதாவது ஜிகாத் என்ற பெயரில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதை மையக் கருவாக வைத்து படம் உருவாகியுள்ளது. 

பிரதமர் மோடி இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நடிகர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம், கோவா, திரிபுரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் திரைப்படத்திற்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இந்த படத்திற்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் அதுபோன்ற எந்த வரவேற்போ அல்லது சலுகையோ அளிக்கப்படில்லை. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாஜக மாநில அண்ணாமலைக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அவருடன் சேர்ந்த பலரும் இத்திரைப்படத்தை பார்த்துள்ளனர். 

இதையும் படியுங்கள்: SP Velumani: விரைவில் சிறைச்செல்ல போகும் எஸ்.பி.வேலுமணி.. அதிமுகவை அலறவிடும் அறப்போர் இயக்கம்..!

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் படத்தை பார்த்தார். அவருடன் சென்னை மாமன்ற உறுப்பினரான உமா ஆனந்தன் படத்தை பார்த்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத், 1990 க்கு முற்பகுதியில் காஷ்மீரில் மதம்மாறச் சொல்லி இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இந்த படம் காட்சிப்படுத்தியுள்ளது. அச்சமயத்தில் காஷ்மீரில் முஸ்லிம்கள் மட்டும் வாழ வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் மதம்மாற வலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்ட இந்துக்கள் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் கம்யூனிஸ்டுகள் அங்க அரங்கேற்றப்பட்ட ஜிகாதி யுத்தத்தை மறைத்தனர். உலகத்தரத்தில் தற்போது இந்த படம் ஆவணப்படமாக வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த படம் வெளியாகக் கூடாது என பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் நீதிமன்றத்தில் படத்தை தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை இடதுசாரி ஊடகங்கள் மறைத்தன. காஷ்மீர் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை நாங்கள் தொடர்ந்து எடுத்து வருகிறோம். ஏன் தமிழகத்தில் இதுவரை 168 பேர் ஜிகாதி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படம் ஒவ்வொரு மாநிலத்திலும் திரையிடப்பட வேண்டும். அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் இதனால் ஜிகாதி படுகொலைகள் கொடுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார். 

 

PREV
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்