பாஜகவில் கே.பி.ராமலிங்கத்துக்கு முக்கிய பதவி.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை.!

Published : Mar 16, 2022, 09:54 AM IST
பாஜகவில் கே.பி.ராமலிங்கத்துக்கு முக்கிய பதவி.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை.!

சுருக்கம்

திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராகவும், அக்கட்சியின் விவசாய அணி செயலாளராகவும் இருந்தவர் கே.பி.ராமலிங்கம். இவர், மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக கையாண்டு வருவதாகவும், 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த கே.பி.ராமலிங்கம் அக்கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராகவும், அக்கட்சியின் விவசாய அணி செயலாளராகவும் இருந்தவர் கே.பி.ராமலிங்கம். இவர், மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக கையாண்டு வருவதாகவும், 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.

இதனால், கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துகளை கூறியதாக, கே.பி.ராமலிங்கம் கடந்த 2020-ம் ஆண்டு திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து, கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார். உடனே, அவருக்கு பாஜகவின் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டார். தற்போது, அவருக்கு தமிழக பாஜக துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

]

இதுகுறித்து தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;- தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.K.P.இராமலிங்கம், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவராக நியமனம் செய்யபடுகிறார்கள்.  தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உங்களால பலபேர் இறந்திருக்கிறார்கள்... புதுவை மாநாட்டில் புஸ்ஸி ஆனந்திடம் சீறிய பெண் காவல் அதிகாரி
அந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?