TASMAC: மே 1ம் தேதி முழு மதுவிலக்கா? குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

Published : Mar 16, 2022, 10:37 AM IST
TASMAC: மே 1ம் தேதி முழு மதுவிலக்கா? குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

சுருக்கம்

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும். அவர்கள் எதுவரை உயர்கல்வி கற்க விரும்புகிறார்களோ, அதுவரை இந்த உதவி வழங்கப்படும். 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை நிச்சயம் நடத்துவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக சார்பில் நிழல் நிதி நிலை அறிக்கை 

தமிழக நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் வரும் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின் முன்பாக பாமக சார்பில் நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும். இந்நிலையில், நேற்று சென்னை தியாகராய நகரில் பாமகவின் 20-வது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர்

அப்போது அவர் பேசுகையில்;- அடுத்த 4 ஆண்டுகளில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை ரூ.32 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும். இதற்கு ஆண்டுக்கு 10%க்கும் கூடுதலான வளர்ச்சி எட்டப்பட வேண்டும். தமிழகத்தில் எடுக்கும் திரைப்படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும். ஆனால் வைப்பதில்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.

பெட்ரோல், டீசல் விலை

தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் மாத வருமானம் ரூ.40,000 வரை உள்ள பணிகளில் 80% தமிழர்களுக்கு வழங்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும். நான்காம் தொழில்நுட்பப் புரட்சியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பும் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படும். ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம். தமிழக சட்டப்பேரவை குறைந்தது ஆண்டுக்கு 3 முறையும், 100 நாட்களும் கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வ விவாதம் நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்யும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஓரளவு போக்கும் வகையில், அதன் மீதான வரி தமிழ்நாட்டில் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும்.

பழைய ஓய்வூதியத் திட்டம்

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும். அவர்கள் எதுவரை உயர்கல்வி கற்க விரும்புகிறார்களோ, அதுவரை இந்த உதவி வழங்கப்படும்.  தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த 38 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.50,000 தவிர, கூடுதலாக ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு  அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.  அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் அனைவருக்கும் தேர்வுக் கட்டணம் ரத்து செய்யப்படும்.  தமிழகத்தை 60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும். புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும்.

தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான மே 1 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். முதலமைச்சர், அமைச்சர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் லோக்அயுக்தாவின் அதிகார வரம்பிற்கு கீழ் கொண்டுவரப்படுவார்கள்.  தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஐ.ஐ.டிக்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT) ஏற்படுத்தப்படும்.

மே 1 முழு மதுவிலக்கு

தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான மே 1 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை நிச்சயம் நடத்துவோம். ஒரு சொட்டு மது கூட இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். அது போல் சிகரெட்டும் ஒழிய வேண்டும். கடைசி விவசாயி திரைப்படம் பார்த்தேன். அதன் பிறகு இன்னொரு படத்தை பார்த்தேன். அதில் ஹீரோ ஸ்டைலாக உட்கார்ந்து சிகரெட் பிடிப்பதை பார்த்தேன். அதிலிருந்து படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையே விட்டுவிட்டேன் என ராமதாஸ் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!