எடப்பாடி கோட்டையில் நுழைந்து கெத்து காட்டும் ஓபிஎஸ்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

By vinoth kumar  |  First Published Oct 12, 2022, 7:22 AM IST

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டியுள்ளார்.


அதிமுக இடைக்கால  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டு தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், வைத்தியலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதற்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களையும் கட்சியில் இருந்து நீக்கி புதிய நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்து வருகிறார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் நிர்வாக வசதிக்கா 5ஆக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ஓபிஎஸ் அணிக்கு தாவுகிறாரா கே.பி.முனுசாமி? இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டம் புறக்கணிப்பால் பரபரப்பு.!

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நிர்வாக வசதியை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் கள்ளக்குறிச்சி வடக்கு என இரண்டு மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

 

pic.twitter.com/LdkFjIaO2L

— O Panneerselvam (@OfficeOfOPS)

 

 

*  க. வேங்கையன் ( கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்) கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத்  தொகுதிகள்.

* D.N.பாஸ்கர் (கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்) ரிஷிவந்தியம், திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிகள்.

இதேபோன்று, சேலம் மாநகர், சேலம் புறநகர் எனக் கழக ரீதியாக செயல்பட்டு வந்த இரண்டு மாவட்டங்கள் நிர்வாக வசதியை முன்னிட்டு, சேலம் மாநகர், சேலம் புறநகர் மேற்கு, சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மத்திய மற்றும் சேலம் புறநகர் வடக்கு என ஐந்து மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

* N. தினேஷ் (சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்) சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிகள்.

* எடப்பாடி P.A.இராஜேந்திரன் (சேலம் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்) எடப்பாடி, சங்ககிரி சட்டமன்றத் தொகுதிகள்.

* A.பெரியசாமி (சேலம் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்) ஆத்தூர், கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிகள்

*  M. ஜெய்சங்கர் (சேலம் புறநகர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர்) வீரபாண்டி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிகள்

*  N. ராஜ்குமார் (சேலம் புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்) மேட்டூர், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிகள்.

ஓமலூர் சட்டமன்றத் தொகுதி அமைப்பரளராக

A.மணிகண்டன் (எ) ராஜ்குமார் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- எம்ஜிஆரின் ராமவரம் வீட்டிற்கு வர சசிகலாவிற்கு அனுமதி மறுப்பா.?அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்! என்ன காரணம் தெரியுமா?

click me!