தமிழ்நாட்டில் அரசியல் பதற்றத்தை உண்டாக்கும் பாஜக.. கொந்தளித்த மதுரை எம்பி சு.வெங்கடேசன்

By Raghupati RFirst Published Oct 11, 2022, 9:22 PM IST
Highlights

தமிழ்நாட்டில் அரசியல் பதற்றத்தை உருவாக்க வேண்டும். வெறுப்பை உருவாக்கி அதில் வாக்கு வங்கி பெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்படுகிறது’ என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார் மதுரை எம்பி சு.வெங்கடேசன்.

காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக

இதனிடையே, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி ஆகியவற்றுக்கு காவல் துறை அனுமதி மறுத்தது.இந்நிலையில், அக்.11ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என்று மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கட்சிகள், 13-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மாலை 500 இடங்களில் மனிதச் சங்கிலி நடைபெற்றது. மதுரையில் எம்பி சு.வெங்கடேசன் தலைமையில் மனிதச் சங்கிலி பேரணி நடந்தது.

இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அப்போது பேசிய எம்பி சு.வெங்கடேசன், ‘தமிழ்நாட்டில் அரசியல் பதற்றத்தை உருவாக்க வேண்டும். வெறுப்பை உருவாக்கி அதில் வாக்கு வங்கி பெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்படுகிறது. இந்த பேரணியில் சேர்ந்த கைகள் மனித கைகள் அல்ல, பகுத்தறிவு கரங்கள். இந்த பேரணி வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க..தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் மெட்டா.. ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியூட்டும் பின்னணி காரணம்

click me!