விவரம் அறியாமல் பொய்யான செய்தியை பரப்பிய பாஜக நிர்வாகி… வைரலானதால் நெட்டிசன்கள் விமர்சனம்!!

By Narendran SFirst Published Oct 11, 2022, 8:33 PM IST
Highlights

தவறான தகவலுடன் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதா மணி செய்துள்ள டிவீட் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

தவறான தகவலுடன் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதா மணி செய்துள்ள டிவீட் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அவரது டிவீட்டில், எந்த நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது என்ற செய்தியை கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன் போட்றா வெடியை என்று கேப்சன் போட்டுள்ளார். பாஜகவினர் பலர் இந்த டிவிட்டர் பதிவை பகிர்ந்து வந்தனர். மேலும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு அமெரிக்காவில் தடை, இனி நீங்கள் அமெரிக்காவே செல்ல முடியாது என்று பாஜகவினர் விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் பாஜகவினர் பகிர்ந்து வரும் அந்த செய்தி பொய்யானது என்றும் அந்த விதி ஒரு சில நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் மொழித்திணிப்பு செய்ததால் வங்காளதேசம் எனும் நாடு உருவானது.. அமித்ஷாவை எச்சரித்த சீமான்.

அமெரிக்காவில் குடியேறுவதற்கு கடும் சட்ட திட்டங்கள் உள்ள நிலையில் சில நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்வதே கடினமான ஒன்றாக இருக்கும் அளவிற்கு அமெரிக்கா சட்ட திட்டங்கள் இருக்கும். இதற்கான அமெரிக்க குடியுரிமை சட்டத்தை அந்நாட்டு அரசு 1952ல் நிறைவேற்றியது. இதில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் அன்மையில், அமெரிக்காவின் சட்டப்படி கம்யூனிஸ்ட் மற்றும் சர்வாதிகார கட்சிகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேற முடியாது. ஆனால் இதில் நிறைய விதி விலக்குகள் உள்ளன. உதாரணமாக நேபாளத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் நினைத்தால் அமெரிக்காவில் குடியேற முடியும். அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்கு சென்று வர முடியும்.

இதையும் படிங்க: மொழியை திணித்தால் திணிக்கும் கையிலேயே துப்பிவிடுவோம்... கமல்ஹாசன் ஆவேசம்!!

இதற்கு தடை எதுவும் கிடையாது. கம்யூனிஸ்ட் மற்றும் சர்வாதிகார கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் சிலருக்கு இதில் விலக்கு உள்ளது. தகுதி அடிப்படையில் கம்யூனிஸ்ட் மற்றும் சர்வாதிகார உறுப்பினராக இருந்தாலும் அமெரிக்காவில் குடியேற முடியும். முக்கியமாக இந்தியர்களுக்கு இந்த விதி பொருந்தாது. இந்தியாவில் சிபிஎம், சிபிஐ கட்சிகளில் இருந்தாலும் கூட அமெரிக்காவில் குடியேற முடியும் என்பதே அந்நாட்டின் சட்டதிட்டமாக உள்ளது. இந்த முழு விபரம் அறியாத பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதா மணி தவறான செய்தியை பகிர்ந்தது இணையத்தில் வைரலாக வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலர் அவரையும் அவரது பதிவை பகிர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினரை விமர்சித்தவர்களை விமர்சித்து வருகின்றனர். 

click me!