சேலம் ஆத்தூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க சசிகலாவிற்கு அனுமதி வழங்க கூடாது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கால்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சேலத்தில் சசிகலா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகள் இதுவரை முடிவடையவில்லை, அதிகார போட்டி காரணமாக சசிகலா,டிடிவி தினகரன், ஓபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனிடையே அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் தங்களுக்கு தான் ஆதரவு என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் சசிகலா ஒவ்வொரு மாவட்டமாக தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்தவகையில் சேலம் மாவட்டத்திற்கு சசிகலா இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்க்கு இபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சசிகலா கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் சாரதா ரவுண்டானா, நரசிங்கபுரம் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு இன்று மாலை அணிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
போலீசில் புகார் தெரிவித்த அதிமுக எம்எல்ஏ
இது தொடர்பான அறிவிப்பும் சசிகலா தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆத்தூர் ஜெய்சங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி உள்ளிட்ட அதிமுக சேலம் மாவட்ட நிர்வாகிகள் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், ஆத்தூர், தலைவாசல், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகள் அ.தி.மு.க. சார்பில் எங்கள் சொந்த செலவில் வைக்கப்பட்ட சிலைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளில் அதிமுகவிற்கு தொடர்பில்லாத சசிகலா மாலை அணிவிப்பதாக தகவல் வெளியாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே அந்த சிலைகளுக்கு சசிகலா மாலை அணிவிக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு சசிகலா மாலை அணிவித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். அ.தி.மு.க.விற்கு சம்பந்தமில்லாத சசிகலா சிலைகளுக்கு மாலை அணிவித்து கொடியேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு காரணமாக சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் சசிகலா சேலம் மாவட்ட பயணத்தின் போது எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் பாதுகாப்பு அதிகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்