இந்த விஷயத்துல பழனிச்சாமி, ஸ்டாலினும் ஒன்னு தான்!அவங்களுக்கு இப்படி பச்சை துரோகம் செய்யலாமா! டிடிவி.தினகரன்.!

Published : Jul 25, 2022, 01:56 PM ISTUpdated : Jul 25, 2022, 01:58 PM IST
 இந்த விஷயத்துல பழனிச்சாமி, ஸ்டாலினும் ஒன்னு தான்!அவங்களுக்கு இப்படி பச்சை துரோகம் செய்யலாமா! டிடிவி.தினகரன்.!

சுருக்கம்

திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட எத்தனையோ வாக்குறுதிகளைப்போல முதியோர் ஓய்வூதியத்தொகை ரூ.1,000லிருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியும் காற்றில் பறந்துபோய் விட்டது.

ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து வரும் தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ''ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தும், அத்திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவதை நிறுத்தியும் வைத்திருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையும் படிங்க;- என்ன கட்சியில் இருந்து நீக்கிட்டாங்க! உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட OPS! தலைமை நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?

திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட எத்தனையோ வாக்குறுதிகளைப்போல முதியோர் ஓய்வூதியத்தொகை ரூ.1,000லிருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியும் காற்றில் பறந்துபோய் விட்டது.

உறுதியளித்தபடி உதவித்தொகையை உயர்த்தவில்லை என்றாலும், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்ததை குறைப்பதும், புதியவர்களுக்கு வழங்க மறுப்பதும் பச்சை துரோகமாகும்.

இதையும் படிங்க;-  உண்மை எதுவென்று தெரியாமல் உளறாதீங்க.. இது உங்க பதவிக்கு அழகு அல்ல.. இபிஎஸ்ஐ பங்கம் செய்த அமைச்சர்.!

முந்தைய பழனிசாமி அரசு ஆரம்பித்து வைத்த ஏழை, எளிய முதியோரை வஞ்சிக்கும் இந்தப் படுபாதகத்தை ஸ்டாலின் அரசும் தொடர்வது வேதனைக்குரியது. இதனால்தான், மக்களை வஞ்சிப்பதில் பழனிசாமியும், ஸ்டாலினும் ஒன்று எனச் சொல்லுகிறோம் என  டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-   எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்.. உரிமையியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக கூட்டணியில் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!
இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!