ஆ.ராசா கண்டிக்கவில்லை என்றால் திமுக அதற்குரிய தண்டனையைப் பெறும்: ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை!!

By Raghupati R  |  First Published Sep 21, 2022, 3:46 PM IST

முதலமைச்சர் ஆ.ராசாவை கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.


மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி நடத்தி 100 ஆண்டுகள் ஆன நிலையில் காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு  சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் காந்தியடிகள் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் மலர்கள் தூவி மரியாதை செய்து தியாகிகளுக்கு மரியாதை செய்து அதனையொட்டி ராட்டையில் நூல் நூற்றார், 

இதற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் "மதுரைக்கு என தனித்துவமான பாரம்பரியம், பண்பாடுகள் உள்ளன. மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி செய்தார், அரை ஆடை புரட்சி நடைபெற்று 100 ஆண்டுகள் கடந்துள்ளது. அரை ஆடை புரட்சி என்பது உலக புரட்சியாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !

எடப்பாடியார் உள்துறை அமைச்சரை சந்தித்து, நடந்தால் வாழி காவேரி திட்டம், கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்றும், சட்ட ஒழுங்கு தமிழகத்தில் கேள்விகுறியாகி உள்ளது என்று பல்வேறு கோரிக்கைகளை அளித்துள்ளார். ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சாக உள்ளது. எந்தவொரு நூலிலும் பிறப்பால் பாகுபாடு உள்ளதாக கூறவில்லை. நாட்டிற்கு தேவையானவைகளை பேசாமல் ஆ.ராசா தேவையற்றவைகளை பேசி வருகிறார்.

ஆ.ராசாவின் பேச்சால் நாடு கொந்தளித்து உள்ளது. முதலமைச்சர் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர். இதுவரை  முதல்வர் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவில் 90% இந்துக்கள் உள்ளனர் என்று முதலமைச்சர் கூறியுள்ளார், அப்படி என்றால் அவர்களையும் சேர்த்து தான் ராஜா கூறி உள்ளாரா? ராஜா நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அவர் பேச யார் உரிமை கொடுத்தது ஒருவேளை முதலமைச்சர் ஊதுகுழலாக ராசா பேசி உள்ளாரா என்ற கேள்வி தற்போது எழும்பி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்

ஆ.ராசா சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மன்னிப்பு கேட்கவில்லை, ஆ.ராசாவின் கருத்து ஒட்டுமொத்த திமுகவின் கருத்தாக தான் பார்க்க வேண்டும். எல்லா மதங்களும் அறநெறியை மட்டுமே போதனை செய்கிறது, முதல்வர் ஆ.ராசாவை கண்டிக்க வேண்டும். முதல்வர் ஆ.ராசாவை கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள்.

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது மின் கட்டணத்தை ஏற்றாதே ,சொத்து வரி ஏற்றாதே என்று கூறினார். தற்பொழுது முதலமைச்சர் ஆன பின் சொத்து வரியை  ஏற்றிக் கொள்ளுங்கள், மின் கட்டணத்தை ஏற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஆட்சி இல்லை என்றால் ஒரு பேச்சும் ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சும்  என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்து, மாத்திரைகள்  தட்டுப்பாடு உள்ளது. மருந்து தட்டுப்பாட்டை நீக்கி காய்ச்சலை குறைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் சொத்து வரி கட்ட வேண்டும் என்றால் சொத்தை விற்கும் நிலை உள்ளது" என்றார்.

மேலும் செய்திகளுக்கு..சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு போட்டியிடும் ‘இருவர்’.. கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் போடும் புது கணக்கு

click me!