பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழகம்... 5 ஆக பிரிக்க சொல்லி அன்புமணி ஐடியா.. ஸ்டாலின் அரசை குத்தி கிழிக்கும் பாமக.

Published : Sep 21, 2022, 03:14 PM IST
பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழகம்... 5 ஆக பிரிக்க சொல்லி அன்புமணி ஐடியா.. ஸ்டாலின் அரசை குத்தி கிழிக்கும் பாமக.

சுருக்கம்

தமிழகத்தின் நேரடி அந்நிய முதலீடு போதுமானதல்ல என்றும் அதிக முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை  தேவை என்றும் பா.ம.க.  தலைவர்  மருத்துவர் அன்புமணி  இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தின் நேரடி அந்நிய முதலீடு போதுமானதல்ல என்றும் அதிக முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை  தேவை என்றும் பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி  இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின் வருமாறு:- 

2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வந்த நேரடி அந்நிய முதலீடுகளின் மதிப்பு ரூ.5836 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் பெறப்பட்ட ரூ.5640 கோடியை விட ரூ.196 கோடி  அதிகம் தான் என்றாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், திறனுக்கும் போதுமானதல்ல. 

இதே காலத்தில் மராட்டியம் ரூ.40,386 கோடி (31.59%), குஜராத் ரூ.24,692 கோடி(19.31%),  கர்நாடகம் ரூ.21,480 கோடி (16.80%), தில்லி ரூ.17,988 கோடி (14%)  அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில், தமிழ்நாடு 4.46% மட்டுமே ஈர்த்திருக்கிறது. அதனால் தமிழகம் ஐந்தாவது இடத்தையே பிடித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்: ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம்.. வைக்கலாமா, வேண்டாமா? சர்ச்சை கேள்விக்கு அதிரடி பதில்.!

2019 அக்டோபர் முதல் கடந்த ஜூன் வரையிலான  சுமார் மூன்றாண்டுகளில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு ரூ.52,676 கோடி (4%) மட்டுமே  அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது. இதிலும் மராட்டியம், கர்நாடகம், குஜராத், தில்லி ஆகியவற்றுக்கு  அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் தான் உள்ளது. 

இதையும் படியுங்கள்: எம்ஜிஆர் ஜெயலலிதாவின் தளபதி.. கருணாநிதி மடியில் விழுந்த தத்துப்பிள்ளை.. அரசியலில் கரைகண்ட சேடப்பட்டியார்.

இந்தியாவில் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் மராட்டியத்திற்கு அடுத்தபடியாக  தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது, தமிழகத்தில் மிகச்சிறந்த மனிதவளம் உள்ளது. இந்தக் காரணிகளின்படி  பார்த்தால் அந்நிய முதலீட்டை  ஈர்ப்பதில் தமிழகம் முதல் இரு இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும், ஆனால் இல்லை. 

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள்  அதிகம் தேவை. இதற்காக பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல தமிழகத்தை 5 தொழில் முதலீட்டு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு முதலீட்டு ஆணையரை நியமித்து அதிக முதலீட்டை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!