முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

By Thanalakshmi VFirst Published Sep 21, 2022, 1:30 PM IST
Highlights

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவருக்கு வயது 77. மதுரையில் தனியார் மருத்துவமனையில் 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார்.
 
மேலும் படிக்க:வழக்குப் போடுங்கள் காத்திருக்கிறேன்..! மநுஸ்மிருதியை படித்து காட்டி தோலுரிப்பேன்- பாஜகவை அலறவிட்ட ஆ.ராசா

இவர் 2006 ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைத்தார். மேலும் திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணிபுரிந்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் எம்.பி தொகுதியில் வென்று வாஜ்பாய் அரசில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. மேலும் 1977,1980,1984, 1991 ஆகிய ஆண்டுகளில் அதிமுக எம்எல்ஏ ஆகவும் இருந்தவர்.

மேலும் படிக்க:முன்னாள் எம்எல்ஏவை பாஜகவிற்கு தட்டி தூக்கிய அண்ணாமலை...! அலார்ட் ஆகும் அரசியல் கட்சிகள்

மதுரை திருமங்கலத்தில் வசித்து வரும் இவர், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை பதிவு செய்து  வருகின்றனர். மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

click me!