வழக்குப் போடுங்கள் காத்திருக்கிறேன்..! மநுஸ்மிருதியை படித்து காட்டி தோலுரிப்பேன்- பாஜகவை அலறவிட்ட ஆ.ராசா

By Ajmal Khan  |  First Published Sep 21, 2022, 1:20 PM IST

 ராஜா மீது வழக்கு போடுவோம் என குரல் எழுப்புகிறார்கள், அந்த நாளை தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.  உன்னுடைய மநுஸ்மிருதியை படித்து காட்டி, பகவத் கீதையை எடுத்துப் படித்துக் காட்டி நீ யார் என்பதை தோல் உரிக்கவில்லை என்றால் நான் கலைஞரின் பிள்ளை இல்லை என ஆ.ராசா ஆவேசமாக கூறினார்.
 


ஆ.ராசா மீது வழக்கு தொடர வேண்டும்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியானது அதில்,  ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்;  சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக  இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற வகையில் பேசியிருந்தார். இதற்க்கு பாஜக, இந்து முன்னனி உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.  தமிழகத்தில் பல்வேறு காவல்நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அ.ராசா மீது வழக்கு தொடர வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர். இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற பொதுகூட்டத்தில்  ஆ.ராசா பதில் அளித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் காலை வைத்து பாருடா நாயே.. ஆ.ராசாவை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் கைது.!

சனாதன இந்து நமக்கு எதிரி

அப்போது பேசிய ஆ.ராசா, உழைக்கிற இந்துக்கள் எல்லாம் ஒரு பக்கம்,  உழைக்காமல் சாப்பிடுகின்ற இந்துக்கள் எல்லாம் மறுபக்கம், அந்த இந்து எல்லாம் சனாதனம் இந்து, இது சாமானிய இந்து நீங்கள் வேற இந்து நாங்க வேற இந்து, சமத்துவம் பேசாத இந்து சனாதன இந்து, எல்லோரும் சமம், எல்லோரும் கல்வி கற்க வேண்டும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், என்கிற கூறும்  இந்த இந்துக்கள் எல்லாம் யார் தலைவன் என்றால் பெரியார், அண்ணா, கலைஞர்,  ஸ்டாலின்.  உங்களுக்கு அவர்கள் எல்லாம் தலைவர்கள் இல்லை, உங்களுக்கு தலைவர் சங்கராச்சாரியார் என கூறினார். மேலும் தொடர்ந்து பேசியவர்,  இன்றிலிருந்து சனாதன இந்து நமக்கு எதிரி,

திமுகவில் இருந்து சுப்புலெட்சுமி ஜெகதீசன் வெளியேறியது ஏன்..? அடுத்தது யார்..? ஆர்.பி உதயகுமார் புதிய தகவல்

வழக்கு போடுங்கள் காத்திருக்கேன்

சபிக்கப்பட்டு, ஜாதியால் ஒடுக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டு, தாழ்த்தப்பட்டு படிப்பறிவு இல்லாமல் 100 ஆண்டுகளாக அடிமையாக ஆக்கப்பட்டு பெரியாரால் அண்ணாவால் கலைஞரால் பாதுகாக்கப்பட்ட இந்துக்களுக்கு எல்லாம் நாங்கள் தான்,  ராஜா மீது வழக்கு போடுவோம் என குரல் எழுப்புகிறார்கள், அந்த நாளை தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.  உன்னுடைய மநுஸ்மிருதியை படித்து காட்டி,பகவத் கீதையை எடுத்துப் படித்துக் காட்டுவேன்  யார் என்று தோல் உரிக்கவில்லை என்றால் நான் கலைஞரின் பிள்ளை இல்லை என கூறினார்.

இதையும் படியுங்கள்

முன்னாள் எம்எல்ஏவை பாஜகவிற்கு தட்டி தூக்கிய அண்ணாமலை...! அலார்ட் ஆகும் அரசியல் கட்சிகள்
 

click me!