சனாதன தர்மம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி சார்பாக கோவை பீளமேடு பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி ஆ.ராசாவை ஒருமையில் பேசிய கடும் விமர்சனம் முன்வைத்து மிரட்டல் விடுவிக்கும் வகையில் பேசியிருந்தார்.
கோவையில் நடைபெற்ற இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது திமுக எம்.பி ஆ.ராசாவுக்கும், திமுகவினருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்த மாவட்ட தலைவர் உத்தம ராமசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சனாதன தர்மம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி சார்பாக கோவை பீளமேடு பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி ஆ.ராசாவை ஒருமையில் பேசிய கடும் விமர்சனம் முன்வைத்து மிரட்டல் விடுவிக்கும் வகையில் பேசியிருந்தார்.
இதையும் படிங்க;- போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் காலை வைத்து பாருடா நாயே.. ஆ.ராசாவை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் கைது.!
இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழக முதல்வர், தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசியதோடு, பயங்கர மிரட்டல் கொடுத்த பாஜக மாவட்டத் தலைவர் உத்தம ராமசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர். புகாரை அடுத்து இன்று காலை பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த பிறகு உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பா.ஜ.க தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேட்டியளித்த உத்தம ராமசாமி;- ஒரு மதத்தை குறித்து பேசியவரை கண்டிக்காமல் உள்ளனர். நான் என்ன தவறாக பேசினேன் என்பதை நிரூபிக்கவும். இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன். நான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். என் சகோதரிகளை தாய்மார்களை பழித்து பேசியவர் எவனா இருந்தாலும் சும்மா விடமாட்டேன் என்றார்.
இதையும் படிங்க;- பாஜக மாவட்ட தலைவரை கைது செய்தது ஏன்..? திமுகவின் சர்வாதிகாரத்தனத்திற்கு விரைவில் முடிவு- அண்ணாமலை ஆவேசம்
தொடர்ந்து பாஜகவினர் அவினாசி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பாலாஜி உத்தம ராமசாமி கோவை ஜே.எம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் மீது இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்கும் விதமாக பேசுதல் (153 ஏ) மற்றும் ஐ.பி.சி 504, 505 என்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.