சூத்திரன் அல்லாத எச்.ராஜாவுக்கு எதுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருது.. ஆ.ராசா கருத்துக்கு திருமா ஆதரவு..!

By vinoth kumarFirst Published Sep 21, 2022, 11:19 AM IST
Highlights

இந்து என்று ஒத்துக்கொண்டால் சூத்திரன் என்று ஒத்துக் கொள்ள வேண்டிவரும். சூத்திரன் என்று ஒத்துக்கொண்டால் அதற்கு மனுதர்மம் என்ன பொருள் தருகிறதோ அந்த பொருளையையும் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பதற்கும், அவர்களுடைய உடைமைகளை திரும்ப பெறுவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்;- இலங்கை கடற்படையால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பதற்கும், அவர்களுடைய உடைமைகளை திரும்ப பெறுவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் இது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ராகுலின் யாத்திரை காங்கிரசிற்கு மட்டுமல்ல இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். 

இந்து என்று ஒத்துக்கொண்டால் சூத்திரன் என்று ஒத்துக் கொள்ள வேண்டிவரும். சூத்திரன் என்று ஒத்துக்கொண்டால் அதற்கு மனுதர்மம் என்ன பொருள் தருகிறதோ அந்த பொருளையையும் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே நான் இந்து இல்லை என்று நீ ஏன் சொல்லக்கூடாது என்று சூத்திரர்களை பார்த்து சூத்திரர்களாக இந்த சமூகம் அடையாளப்படுத்தப்படுகிறவர்களை பார்த்துச் சொன்னார் அது தலித் மற்றும் பழங்குடியினருக்கு பொருந்தாது.

அதேபோல், பிராமணர், சத்திரியர், வைசியர், என்பவர்களுக்கு பொருந்தாது. இந்துச் சமூகத்தில் உள்ள நான்காம் வர்ணத்தைச் சார்ந்த சூத்திரர்களுக்கு அந்த கேள்வி எழுப்பப்படுகிறது. ஏனென்றால் அந்த வர்ணாசிரம தர்மம் வெளிப்படையாக சொல்லுகிறது. சூத்ரார் என்றால் அப்பன் பெயர் தெரியாதவர்கள், வேசி பிள்ளைகள் இதைத்தான் அவர் மேற்கோள் காட்டி இருக்கிறார். லிங்காயத்துக்கள் நாங்கள் இந்துக்கள் இல்லை என்று எப்படி துணிச்சலாக சொல்லுகிறார்களோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முன் வந்திருக்கிறார்களோ. அப்படி சூத்திரர்களாக இருப்பவர்களும் முன்வர வேண்டும் என்று பெரியார் பேசியதை அம்பேத்கர் பேசியதை அவர் மீண்டும் சொல்லி இருக்கிறார் அதைத்தான் விடுதலைச் சிறுத்தைகளும் தொடர்ந்து சொல்கிறோம். 

நானும் அதை பேசி வருகிறேன். ஆனால், இவர்கள் சனாதனிகள் குறிப்பாக சூத்திரன் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. சூத்திரர்களாக இருப்பவர்கள் இந்த கேள்வி எழுப்ப வேண்டும் எச். ராஜா சூத்திரரா என்ற கேள்வியை எழுப்பு கடமைப்பட்டிருக்கிறோம். உங்கள் நம்பிக்கையான வர்ணாசிரம தர்மத்தின் படி சூத்திரன் அல்லாத எச்.ராஜாவுக்கு ஏன் ஆத்திரம் வருகிறது என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். 

click me!