ஒற்றை வார்த்தை டுவிட்டர் பதிவான ஒற்றுமை என சசிகலா பதிவிட்டிருந்த நிலையில், அதிமுக தற்போது ஒற்றுமையாகத்தான் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை- உரிமை பறிப்பு
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும், பேபி அணையை சீரமைத்த பின் 152 அடி நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெற்றுத்தந்தார். ரூல்கர்வ் என்ற விதி அணை பாதுகாப்புச் சட்டத்தின் படி செயல்படுத்தப்படுகிறதா, அது சட்டமா விதியா, உத்தரவா என்று தெரியாத நிலை உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர்மட்டத்தை தேக்கி வைக்க கூட நமக்கு காலம், நேரம், இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் கிடைக்கிற போதெல்லாம் தேக்கி வைக்கத்தான் அணை கட்டப்படுகிறது. ஆனால் இந்த நேரத்தில் தான் இந்த காலத்தில் தான் இந்த இடத்தில் தான் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என்பது இயற்கைக்கு முரணான வகையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் நமக்கு வழங்கிய உரிமையை பறிக்கும் விதமாக தான் ரூல்கர்வ் என்ற உத்தரவு அமைந்துள்ளது. இது நமக்கு பாதகமாக உள்ளது.
2 லட்சம் அரசு பணியிடங்கள் எங்கே ? தமிழக இளைஞர்கள் கதி என்ன ? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி !
வாய்மூடி மவுனியாக திமுக
அதிமுகவை பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் வரை சென்று உயர் நீதிமன்றம் இன்றைக்கு தெளிவான வரிக்கு வரி தெளிவான புரியாதவர்கள், தெரியாதவர்கள் எல்லாம் புரிந்து கொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதிமுக எடப்பாடி பழனிச்சாமியை ஏகமனதாக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு பல பணிகள் உள்ளது. திமுக மறந்துள்ள பணிகளை நியாபகப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. திமுகவினர் முதலில் எட்டுவழிச்சாலையை எதிர்த்தார்கள், தற்போது ஆதரிக்கிறார்கள். எட்டு வழிச்சாலையை காலத்தின் கட்டாயம் என பேசுகிறார்கள். 6 பேர் விடுதலை தற்போது வரை கேள்விக்குறியோடு உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது நாங்களே விடுதலை செய்வோம், நாங்கள் விடுதலையை முன்னெடுது செல்வோம் என பேசினார்கள். ஆனால் தற்போது வாய்மூடி மவுனியாக உள்ளனர்.
முதல்வர் சொல்லிட்டாரு.. 18 மாதம் போதும், மதுரையை மாற்றிக்காட்டுகிறேன்.. பிடிஆர் பேச்சு !
ஒற்றுமை- அதிமுக
டாஸ்மாக் கடையை மூட குடும்பத்தோடு போராட்டம் நடத்திய நிலையில் தற்போது பள்ளி, கல்லூரி, கோவிலுக்கு அருகே இடமாற்றம் என்ற பெயரில் மதுக்கடை வைக்கிறார்கள். இன்றைக்கு நில எடுப்பு பணிகள் கூட திமுகவால் செய்ய முடியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அதிமுக ஆட்சியில் நிலம் எடுப்பு பணிகளில் சிறு சலப்பு கூட எற்படவில்லை.புதிய விமான நிலைய விரிவாக்கம் வாழ்வாதாரத்தை எந்தளவு கேள்விக்குறியாக்கி உள்ளது என்பதை மக்கள் பார்த்து கொண்டுள்ளனர். திமுக அரசு ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்த தீர்ப்புக்கு பிறகு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திமுக அரசை தோலுரித்து காட்டுவதற்கும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குவற்கும் வேகத்தோடு உத்வேகத்தோடு உற்சாகத்தோடு தொண்டர்கள் உழைக்க தயாராகி விட்டனர். செயல்பட தயாராகி கொண்டுள்ளனர். சசிகலா ஒற்றுமை என டிவிட்டரில் பதிவிட்டுள்ளது குறித்த கேள்விக்கு, அதிமுகவை பொறுத்தவரை ஒற்றுமையாக உள்ளது என நீதிமேன்றமே தீர்ப்பளித்துவிட்டது. நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கருத்து சொல்ல விவாதிக்க ஒன்றும் இல்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்