தனது விளம்பரத்திற்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார்...! ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

By Ajmal Khan  |  First Published Aug 24, 2022, 8:48 AM IST

234 தொகுதிகளில்  10 கோரிக்கை என்று முதலமைச்சர் நிர்ணயம் செய்திருப்பது ஒரு ஆண்டிற்காக அல்லது ஐந்தாண்டு ஆண்டிற்கானதா என கேள்வி எழுப்பியுள்ள ஆர்.பி.உதயகுமார், மக்களின் கோரிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது எனவும் கூறியுள்ளார்.
 


சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தங்கள் தொகுதிகளில் தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை, முன்னிலைப்படுத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் என்று கடிதம் எழுதினார், இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது, முதலமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதுகிறார்,அதில் போதை பொருள் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறார். முதலமைச்சர் கையில் தான் காவல்துறை உள்ளது முதலமைச்சர்  அதிகாரிகளைக்கொண்டு, இரும்பு கரம் கொண்டு அடக்கலாம், இதை தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் வலியுறுத்தி வருகிறார், அதேபோல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர், இதைதடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் குரல் எழுப்பி வருகிறார் ,ஆனால் அதற்கு முதலமைச்சர் குழு அமைத்து வருகிறார். தற்போது  சட்டமன்ற உறுப்பினருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார் அதில் தொகுதிகளில் நீண்ட நாட்களாக  தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை பட்டியலிட்டு, 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கவேண்டும் என்று கூறுகிறார், எனது திருமங்கலம் தொகுதியை எடுத்துக் கொண்டால், மூன்று ஒன்றியங்கள், 116 ஊராட்சிகள், 324 வருவாய் கிராமங்கள்,1 நகராட்சி, 2 பேரூராட்சி உள்ளது ஏறத்தாழ ஒரு லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளது மக்களை எடுத்துக் கொண்டார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் உள்ளனர்,

Tap to resize

Latest Videos

அதிமுக, பாஜக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்

பத்து முதன்மை கோரிக்கை

 ஏற்கனவே இந்த தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவு படுத்த வேண்டும், பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், திருமங்கலம் சுங்கச்சாவடி அகற்றவேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் அரசை வலியுறுத்தி தான் வருகிறோம், தற்போது முதலமைச்சர் ஒரு தொகுதிக்கு 10 கோரிக்கை என்று கூறுகிறார், இந்த 10 கோரிக்கை என்பது ஒரு ஆண்டிற்கு மட்டுமா அல்லது ஐந்தாண்டு மட்டுமா என்பதை முதலமைச்சர் தெரிவிக்கவில்லை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களை செயல்பட மக்கள் அனுமதித்து உள்ளனர், அதில் பத்து கோரிக்கையை மட்டும் எப்படி கட்டுக்குள், வட்டத்துக்குள் செய்ய முடியுமா சந்தேகம் எழுந்துள்ளது, மக்களுக்கு நிறைய தேவைகள் உள்ளன இந்த ஆயிரம் கோடி என்பது பத்தாது, ஏற்கனவே தொகுதி மேம்பாட்டின் மூலம் மூன்று கோடி ரூபாய் மக்களுக்காக திட்டங்களை செய்து வருகிறோம், கடந்த ஒன்றை ஆண்டு காலம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில், எந்த வளர்ச்சி திட்டங்களையும் திமுக அரசு செயல் படுத்தவில்லை, மதுரையில் 10 தொகுதியில் உள்ளன இதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதியை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் திமுக அரசு  செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

ஆக.30ல் தமிழக அமைச்சரவை கூட்டம்... முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு!!

விளம்பரத்திற்காக கடிதம்

முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார், இல்லையென்றால் குழு அமைக்கிறார், ஆனால் வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என விமர்சித்தார்.  எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த பொழுது, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் வேறுபாடு இன்றி திட்டங்கள் வகுக்கப்பட்டது. முதலமைச்சர் உச்சவரம் இன்றி கோரிக்கையை நிர்ணயம் செய்ய வேண்டும்,, இல்லையென்றால் வளர்ச்சிக்கான வழித்தடமாக இருக்காது என கூறினார். முதலமைச்சர் விளம்பரப்படுத்திடுத்திட கடிதம் எழுதி உள்ளார் ஆகவே வட்டம், சதுரம் என்று திட்டங்களை சுருக்காமல் மக்களுக்கு உச்சவரம்பின்றி என்று கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்.பி உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறீங்களா? எதை சொல்றீங்க? ஸ்டாலினை கிண்டல் செய்த நாராயணன் திருப்பதி!!

 

click me!