சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள நேரு அரசு மேனிலைப் பள்ளி மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வை மேற்கொண்டார்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆய்வுக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் தாமதமாக பள்ளிக்கு வந்தால் அவர்களை உள்ளே காத்திருக்க செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள நேரு அரசு மேனிலைப் பள்ளி மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வை மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளியின் வாயிலுக்கு வெளியில் நிற்பதை அமைச்சர் கண்டார்.
இதையும் படிங்க;- வரும் சனிக்கிழமை இந்த மாவட்ட பள்ளிகள் மட்டும் செயல்படும்... அறிவித்தது தமிழக பள்ளிக்கல்வித்துறை!!
undefined
அதுகுறித்து மாணவர்களிடம் கேட்டார். பள்ளி தொடங்கிய நேரத்துக்கு பிறகு தாமதமாக வந்ததால் வெளியில் நிற்க வைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, தாமதமாக வந்த பள்ளி மாணவர்களை அழைத்து கொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளே சென்றார்.
அமைச்சர் வருவதை பார்த்த தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் அதிர்ச்சியில் அவரிடம் வந்தனர். தாமதமாக மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலும் அவர்களை வெளியில் நிற்க வைக்காமல் பள்ளிக்கு உள்ளே காத்திருக்க வைக்க வேண்டும். வெளியில் நிற்க வைக்க கூடாது என ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை வழங்கினார். பின் ஒவ்வொரு வகுப்பறையாக சென்ற அமைச்சர் மாணவர்களுக்கு அட்டென்ட்ஸ் எடுத்தார். மழலையர் வகுப்புகள் எப்படி செயல்படுகிறது என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க;- ஸ்ரீமதி உயிரிழப்புக்கு இது தான் காரணம்.. உயிரிழந்த மாணவியின் தோழிகள் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்.!