தன் மீது அனுதாபத்தை தேடவும்,முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பவே ஸ்டாலினின் பேச்சும்,கடிதமும் -ஆர்.பி உதயகுமார்

By Ajmal Khan  |  First Published Jul 10, 2023, 12:54 PM IST

பிறர் மீது பழியை சுமத்தி விட்டு தன்னை பாதுகாத்துக் கொள்ள முதலமைச்சர் அனுதாபத்தை தேடும் பணியில்  ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். 


90% வாக்குறுதி நிறைவேற்றவில்லை

பாஜகவை எதிர்ப்பதால் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும், அதைப்பற்றி இம்மியளவும் கவலையில்லையென முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்தார். மேலும் ஆளுநர் ரவி மீது புகார் தெரிவிக்கும் வகையில் குடியரசு தலைவருக்கு கடிதமும் எழுதியிருந்தார். இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் ஆயுட்காலம் குறித்து நாடு முழுவதும் விவாதமாக உள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த இரண்டு ஆண்டுகளில் 90 சதவீத வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. எந்த சூழ்நிலையில் ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி  கவலைப்பட வேண்டியது இல்லை என்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவிலே முதலமைச்சர் பேசிய பேச்சு தமிழ்நாட்டில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு ஆபத்தா.?

இன்றைக்கு இரண்டு ஆண்டுகளிலே திமுக ஆட்சியின் ஆயுட்காலம் என்னப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சொல்லுகிற போது இந்த பேச்சு மக்களிடத்திலே ஒரு அனுதாபத்தை பெறுவதற்காக முதல்வர் பேசினாரா.? ஏனென்றால் நடைபெறும் முக்கிய பிரச்சனைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இது பேசப்பட்டதா என்பது தான் இன்றைய விவாதமாக இருக்கிறது. மக்களுடைய அனுதாபத்தை பெறுவதற்காக, இன்றைக்கு தங்கள் மீது இருக்கிற கறையை துடைப்பதற்காக, தங்கள் இயலாமையை மறைப்பதற்காக, தங்கள் நிர்வாக திறமையற்றதை மறைப்பதற்காக, 90% நிறைவேற்றாத வாக்குறுதிகளை மக்களிடத்தில் திசை திருப்புவதற்காக,  

விலைவாசி அதிகரிப்பு

சொத்துவரி உயர்வை, மின்சார கட்டண உயர்வை, சட்டம் ஒழங்கு சீர்கேட்டை இதையெல்லாம் மறைப்பதற்காகவா? வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வரும் ஆனால் விலையை பார்த்தாலே கண்ணீர் வருகிறது. அதேபோல இஞ்சி விலையை பார்த்தாலே நமக்கு காய்ச்சல் வர மாதிரி விலைவாசி உயர்ந்து இருக்கிறது. காய்கறிகளை மக்கள் சாப்பிட முடியாத அளவில் 30 சதவீதம் விலை உயர்ந்து விட்டது. முதலமைச்சர் இது குறித்து ஆய்வுக்கூட்டமோ, அறிவுரையை வழங்கவில்லை. ஜனாதிபதிக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை தமிழ்நாட்டு மக்கள் அந்த கடிதத்தை  படித்துப் பார்க்கிற போது தமிழ்நாட்டு மக்களின் நலன் சார்ந்து இருக்கிற ஜீவாதாரபிரச்சனைகளான காவிரி பிரச்சனை,

குடியரசு தலைவருக்கு கடிதம்

முல்லைபெரியார் பிரச்சனை, கட்சதீவு பிரச்சனை, மேகதாது பிரச்சனை ஏதாவது அதில் இடம் பெற்று இருக்குமா என்று பார்த்தால் எதுவும் இல்லை. செந்தில் பாலாஜியிடம் அமலாக்கதுறை விசாரணையால் தொடர்ந்து ஏற்பட்டிருக்கிற பதட்டம், அந்த பதட்டத்தின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கிற நடுக்கமா என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வியாக உள்ளது.  ஆட்சியின் ஐந்தாண்டுகள் ஆயுளை இந்த இரண்டு கால ஆயுளாக எண்ணப்பட்டு வந்து சூழ்நிலை ஏன் வந்தது ? பிறர் மீது பழியை சுமத்தி விட்டு தன்னை பாதுகாத்துக் கொள்ள அனுதாபத்தில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர்.

90% மகளிர் உரிமை தொகை பெற முடியாது

தனக்கும், தன் அரசுக்கும், தன் கட்சிக்கும் அனுதாபத்தை தேடுகிறோம் என்ற முறையில் முதலமைச்சர் கல்யாணம் வீட்டில் பேசிய பேச்சு மக்களுக்கு சேவையாற்றும் தார்மீக  கடமையில் இருந்து முற்றிலும் விலகி சென்று விட்டார். ஆயிரம் ரூபாய் உதவி தொகையை 1,500 உயர்த்தி வழங்குவோம் என்று கூறியதை வழங்கவில்லை. பெண்கள் உரிமை தொகை திட்டத்தில் திமுக அரசு போட்ட தகுதியில் 90 சதவீத குடும்ப பெண்கள்  உரிமைத் தொகை பெற முடியாது.காய்கறிகளை கூட வாங்கி சமைத்து சாப்பிட முடியாத நிலை, அரசு ஊழியர்கள், விவசாயிகள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை. ஆனால் முதலமைச்சரின் இயலாமையை பார்த்து இவருக்காக நாம் வாக்களித்தோம் என்று இந்த தாய் தமிழ் நாட்டு மக்கள் வேதனைப்பட்டு,

அனுதாபம் தேடும் ஸ்டாலின்

கவலைப்பட்டு, கண்ணீர் வடிக்கிறார்கள்.கவர்னரிடம் சண்டை போட நேரம் இருக்கிறது ஆனால் மக்களுக்கு சேவை செய்ய முதல்வருக்கு நேரம் இல்லை.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கு எந்த முயற்சி எடுக்கவில்லை, தங்க முலாம் பூசப்பட்ட தகரம் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் வாக்குறுதி என்பதை இன்றைக்கு அப்பட்டமாக தெரிந்து போய், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். இந்த இரண்டு ஆண்டுகளிலே  இந்த நாட்டை வழிநடத்துவோர் மீது இருந்த நம்பிக்கை இன்றைக்கு அவ நம்பிக்கையாக போய்விட்டது தன் மீது அனுதாபத்தை தேடவும், முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பவும் முதலமைச்சர் பேச்சும், கடிதமும் உள்ளது என மக்கள் கருத்தாக உள்ளது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜி ஒரு உத்தமரா? மாநிலத்தை காக்க வந்த சேவகரா.?குடியரசு தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்- சீறும் அண்ணாமலை
 

click me!