இந்தியாவை நாளுக்கு நாள் அமைதியின்மையை நோக்கி பாஜக அழைத்துச் செல்வதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாசிச பாஜக நாளுக்கு இந்தியாவை அமைதியின்மையை நோக்கி அழைத்து செல்கிறது. சகோதரத்துவம், சமத்தும் போன்றவைகளுக்கு பேராபத்து உள்ளது. தமிழக மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமல் ஆளுநர் தாந்தோன்றி தனமாக செயல்படுகிறார். முதல்வர் தமிழக ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதை வரவேற்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ், சங்க் பரிவார் ஆட்சியில் சிலர் கோலோற்றுகிறார்கள். அவர்களையும் இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கும் மாநிலம் தமிழகம். இதனை கட்டுப்படுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஆளுநர் மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபத்து; வேன் கவிழ்ந்து 16 பெண்கள் காயம்
எனது துணைவியார் 2018ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. என்னை பிடிக்காத சனாதன சங்கி கூட்டம் எனக்கு எதிராக பேச வேண்டுமென கூறி காஞ்சி பாஜக மாவட்ட செயலாளராக நியமனம் செய்து எனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கின்றனர். என் மனைவி ஜீவனாம்சம் கேட்டதாகவும், நான் தரமறுத்ததாகவும் கூறுகிறார்கள். என் மீது லஞ்சம், ஊழல், அரசு சொத்தை கைபற்றியதாகவோ, என் வீட்டிற்கு வருமான விரி, சி.பி.ஐ அனுப்ப முடியாது.
நான் தமிழ்மொழிக்கும், இனத்திற்கும் எதிராக வேலை வாய்ப்பை பறிப்பதற்கு எதிராகவும், அனைத்து ஜாதிகளையும் உயர்பதவியில் நியமிக்க கோருகிறேன். இதனை எதிர்கொள்ள திராணியற்றவர்கள் என் மனைவியை அழைத்து எனக்கு எதிராக பாசிசத்தை மட்டுபடுத்த நினைக்கின்றனர். இருப்பினும் பாஜகவுக்கு எதிராக பேச வந்திருக்கிறேன்.
கோவை, சென்னை இன்டர்சிட்டி ரயில் செவ்வாய் கிழமைகளில் காட்பாடி வரை மட்டுமே இயக்கம் - ரயில்வே வாரியம்
மணல் குவாரிகள் அரசின் கட்டுபாட்டில் இருக்க வேண்டுமென சட்டமாக்கினேன். மணல் குவாரி இன்றைக்கு லாட்டரி விற்கபடுவதை எதிர்த்து சட்டம் கொண்டு வந்தேன். மாவட்டத்திற்கு ஒரு பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்தோம். மணல் குவாரி, கல்வி கொள்ளைக்கு எதிராக என்னுடைய போராட்டம் தொடர்கிறது.
குறிப்பிட்ட அளவே மணல் அல்ல வேண்டும். நீர் ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட கூடாது. மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். நாடாளுமன்றத்தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடருவோம் என கூறினார்.