பெண்கள் மொபைல்போன் பயன்படுத்துவதால்தான் கற்பழிப்புகள் நடக்கிறது... பெண்கள் ஆணையத் தலைவர் சர்ச்சை பேச்சு..!

By Thiraviaraj RMFirst Published Jun 11, 2021, 11:58 AM IST
Highlights

பெண்கள் மொபைல்போன் அதிகமாக உபயோகிப்பதால்தான் கற்பழிப்பு நிகழ்கிறது என்று உ.பி. பெண்கள் ஆணையத் தலைவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். 

பெண்கள் மொபைல்போன் அதிகமாக உபயோகிப்பதால்தான் கற்பழிப்பு நிகழ்கிறது என்று உ.பி. பெண்கள் ஆணையத் தலைவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். 

உத்தர பிரதேச பெண்கள் ஆணையத்தின் தலைவராக இருப்பவர் மீனா குமாரி. இவர் அலிகர் மாவட்டத்தில் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று, அதன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், பெண்கள் மொபைல்போன் அதிகமாக உபயோகிப்பதால்தான் கற்பழிப்பு நிகழ்கிறது என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார், 

இதுகுறித்து அவர் கூறுகையில், “பெண்களிடம் மொபைல்போன்கள் கொடுக்கக் கூடாது. ஏனென்றால், அந்த மொபைல்போன்கள் மூலம் தான் ஆண்களிடம் பேசுகிறார்கள், பின்னர் அவர்களுடன் ஓடிச் செல்கிறார்கள். பெண்களின் கைப்பேசிகளை பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆராய்வதில்லை. இதனால்தான் கற்பழிப்புகள் அதிகம் நிகழ்கின்றன. எனவே பெண் பிள்ளைகளை அவர்கள் தாய் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர்கள் தவறு செய்தால் அதற்கு முழுப்பொறுப்பு தாயே பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

click me!