பதவியேற்றதோடு சரி.. அதுக்கு அப்புறம் ஒருநாள் கூட மாநிலங்களவைக்கு வராத இளையராஜா - கிளம்பிய புது சர்ச்சை !!

By Raghupati RFirst Published Jan 24, 2023, 10:25 PM IST
Highlights

இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி உஷா, இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த படைப்பாளர்களுக்கு ராஜ்யசபாவில் நியமன எம்.பி பதவி வழங்குவது மரபாக இருந்து வருகிறது. நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் இந்தப் பதவியில் ஏற்கெனவே இருந்துள்ளனர்.

அந்த வரிசையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எம்.பி பதவி மத்திய அரசு வழங்கியது. இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.  13 நாட்கள் வரை நடைபெற்ற கூட்டத்தொடரில்  மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..ஓய்வூதியம் 7500 ரூபாயில் இருந்து 25000 ரூபாயாக உயரப்போகிறது.. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு EPFO முக்கிய செய்தி

அதில், நியமன எம்.பிக்களில் தடகள வீராங்கனை பி.டி உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஒரு விவாதத்தில் கலந்துகொண்டார். வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா  கூட்டத்தொடரின் ஒருநாள் கூட கலந்துகொள்ளவில்லை.

அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளது. தற்போது கூட்டத்தொடரில் ஒரு நாள்கூட பங்கேற்காதது குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க..ஜனவரி 27 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இதையும் படிங்க..அதிமுக ஒன்றுபட வேண்டும்.. பிரதமர் மோடி விருப்பம்! ஆனால் இரட்டை இலை மட்டும்.? ஓபிஎஸ் காட்டிய அதிரடி

click me!