தனியாக கூட வேண்டாம்..! அதிமுக கூட்டணியோடு அண்ணாமலை தேர்தலில் போட்டியிட தயாரா..? சவால் விட்ட கே எஸ் அழகிரி

By Ajmal KhanFirst Published Jan 24, 2023, 4:37 PM IST
Highlights

ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை தனித்து கூட போட்டியிட வேண்டாம். அதிமுக கூட்டணியோடு சேர்ந்து போட்டியிட தயாரா என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார்.

ஈவிகேஎஸ்யை சந்தித்த கேஎஸ் அழகிரி

அரசியலமைப்பை பாதுகாப்போம் கையோடு கைகோர்ப்போம் மாபெரும் பரப்புரை இயக்கத்தின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை வேங்கிகால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அவருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

பள்ளி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல்..! தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அன்பில் மகேஷ்

தேர்தலில் போட்டியிட தயாரா.?

அப்போது கூட்டத்தில் பேசிய கேஎஸ் அழகிரி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட தைரியம் இருக்கின்றதா தனியாக கூட வேண்டாம் அதிமுக கூட்டணியிலேயே நின்று காட்ட முடியுமா என சவால் விடுத்தார். ஈரோடு தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக திருவண்ணாமலைக்கு வருகை புரிந்ததாகவும் காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளித்ததாக கூறினார்.  மிகப்பெரிய அளவிலான வெற்றியை ஈரோடு கிழக்கு தொகுதியில் பெறுவேன் என்பதை உறுதியாக தெரிவிப்பதாக ஈவிகேஸ் இளங்கோவன் கூறினார்.

இதையும் படியுங்கள்

நான் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலையை யாராலும் அசைக்க முடியாது! அதிமுக என் கட்டுப்பாட்டுக்குள் வரும்! சசிகலா

click me!