திருவள்ளூர் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இதற்காக திருவள்ளூர் ஐசிஎம்ஆர் அருகே சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமர நாற்காலி எடுத்து வருவதற்கு தாமதமானதால் ஆத்திரமடைந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சட்டப்பேரவையில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பால்வளத்துறை அமைச்சராக சா.மு.நாசர் உள்ளார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இதற்காக திருவள்ளூர் ஐசிஎம்ஆர் அருகே சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அமர நாற்காலி எடுத்து வருமாறு கட்சி நிர்வாகியிடம் கூறியுள்ளார். கட்சி நிர்வாகி நாற்காலியை எடுத்து வர தாமதமானதால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசியுள்ளார். இது தொடர்பான வீிடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.