ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், கைத்தறித்துறை அமைச்சருமான காந்தி கடந்த 21ம் தேதி சென்னை சென்று விட்டு ராணிப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார். காவேரிப்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு ஒருமையில் பேசியதாக சென்னையை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், கைத்தறித்துறை அமைச்சருமான காந்தி கடந்த 21ம் தேதி சென்னை சென்று விட்டு ராணிப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார். காவேரிப்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், சென்னையை 2 இளைஞர்கள் ராணிப்பேட்டையை சேர்ந்த சாமுவேல் என்பவர் தங்களது வங்கியில் இருந்து கடன் பெற்றுள்ளதாகவும் அந்த கடனை நீங்கள் தான் பெற்றுத்தர வேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும், அமைச்சர் காந்தியை இருவரும் ஒருமையில் வசைப்பாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சரின் உதவியாளர் ராஜசேகர் கடந்த 21ம் தேதி காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அமைச்சரை ஒருமையில் பேசிய இளைஞர்கள் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த கோகுல்(25), கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த பாலாஜி(31) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.