சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு..! டிரோன், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை - காவல்துறை அதிரடி உத்தரவு

By Ajmal KhanFirst Published Jan 24, 2023, 11:08 AM IST
Highlights

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 6,800 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

குடியரசு தின விழா- பாதுகாப்பு அதிகரிப்பு

குடியரசு தின விழா வருகிற 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி  சென்னை மெரினா உழைப்பாளர் சிவை அருகே தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை. காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தின விழாவையொட்டி மொத்தம் 6,800 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் குடியரசு தின விழா ஒத்திகை..! 2 ஆண்டுகளுக்கு பிறகு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ,மாணவிகள்

வழிபாட்டு தலங்களில் சோதனை

மேலும், சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட சென்னை விமானநிலையம், இரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் நுட்டங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு. சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

இது தவிர நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம் நுரைப்பாக்கம், நீலாங்களை ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்கள் உட்பட அனைத்து முக்கிய இடங்களிலும், சென்னை பாதுகாப்பு பிரிவின் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு (BODS) மோப்பநாய் பிரிவு மற்றும் மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படை (CSG) பிரிவினருடன் இணைந்து நாசவேலை தடுப்பு சோதனைகளும் (Anti Sabotage Check) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிரோன் பறக்க தடை

மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு 25.01.2023 மற்றும் 26.01.2023 ஆகிய 2 நாட்கள் சென்னையில் டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Otter Unmanned Aerial Vehicles)பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
 

click me!