ஹே ராம் முதல் மொழி திணிப்பு வரை.. கடைசியில் கமல் ஹாசனுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?

By Raghupati R  |  First Published Jan 2, 2023, 3:56 PM IST

ராகுல் காந்தியும், கமல் ஹாசனும் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில், கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய நடை பயணத்தை தொடங்கினார். 

முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைபயணம் நடைபெற்றது. பின்னர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து யாத்திரை தற்போது டெல்லியை அடைந்ததது. இந்த பயணம் தற்காலிக ஓய்வுக்குப் பின்னர் நாளை தொடங்குகிறது. 

Tap to resize

Latest Videos

அடுத்தகட்ட பயணம் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. ராகுல் காந்தியின் தேச ஒற்றுமைக்கான நடைபயணத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன், அதைத்தொடர்ந்து ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது குறித்து மக்கள் நீதி மையம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அதில், மொழி, கலாச்சாரம், விவசாயம், சீனா உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து ராகுல் காந்தியும், கமல்ஹாசனும் விவாதிக்கின்றனர். அப்போது பேசிய கமல் ஹாசன், ஒரு இந்தியனாக நாட்டில் நடப்பவற்றை பார்த்து எனக்குள் எழும் கோபத்தை வெளிப்படுத்த வேண்டியது எனது கடமை. இந்த 2,800 கி.மீ ஒன்றுமே இல்லை. வேர்வையும் கண்ணீரும் ரத்தமும் நிறைந்த பாதையில் நீங்கள் நடத்திருக்கிறீர்கள்.

இதையும் படிங்க..இடம் மாற போகும் திருப்பதி கோவில்.. 70 லட்சம் வீட்டை கோவிலுக்கு எழுதிக்கொடுத்த தமிழ்நாட்டு பெண் !!

இந்த நடைப்பயணத்தில் உங்களுடன் பங்கேற்வில்லை என்றால் அது நியாயமானதாக இருக்காது என்று கூறினார். அடுத்து பேசிய ராகுல் காந்தி, தமிழக மக்கள் அன்பை காட்டும் விதம் மிக வித்தியாசமாக இருக்கிறது. மிகவும் வித்தியாசமான முறையில் உணர்ச்சிப்பூர்வமாக தமிழக மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டுக்கு செல்லும் போதெல்லாம் என் மீது மக்கள் இப்படி அன்பு செலுத்துவை உணர்ந்து வியந்திருக்கிறேன் என்றார்.

A conversation between two proud Indians. All other identities blur when it comes to the Nation .

Have a great united Indian new year. https://t.co/TyGHi6ZVPh

— Kamal Haasan (@ikamalhaasan)

தொடர்ந்து பேசிய கமல் ஹாசன், தமிழர்களின் கலாசாரம் மிகவும் தொன்மையானது. பல போர்கள் கண்டிருக்கிறார்கள். சமணம், பெளத்தம் மூலம் நிறைய கற்றறிந்து இருக்கிறார்காள். அன்பை பன்மடங்கு பொழிவார்கள். காமராஜர், எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் அந்த அன்பில் திளைத்திருக்கிறார்கள். மத நம்பிக்கை இல்லாத, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கூட தமிழைக் கொண்டாடுவார்கள். வணங்குவார்கள் என கூறியுள்ளார். கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி புலி புகைப்படத்தை ஒன்று பரிசாக கொடுத்தார்.

இதைப்பற்றி பேசிய ராகுல் காந்தி, உங்களின் வாழ்க்கை, அணுகுமுறை ஆகியவற்றை இந்த புகைப்படம் பிரதிபலிக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த இந்தியர் என்பதையும் சிறந்த தமிழர் என்பதையும்  இந்த படம் குறிக்கிறது என்று விளக்கமளித்தார். மேலும் பொருளாதார வளர்ச்சி முதல் கிராம சுயாட்சி வரை பல பிரச்சனைகளை பற்றி இருவரும் விவாதித்தனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..Video : சுமார் 360 அடி உயரம்; உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியின் விளிம்பில் நின்ற பெண் - பதறவைக்கும் வீடியோ!

click me!