ஜூலை 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் முன்பு பெண்களை முன்வைத்து மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் இயங்கி வரும் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூலம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநரிடம் கடந்த மாதம் புகார் மனு அளித்தோம். அதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக இயங்கி வரும் பார்கள் தற்போது அதிக அளவு மூடப்பட்டுள்ளது.
மேலும் பேசிய அவர் தமிழக அரசு 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு போலியானது. இதில் ஏற்கனவே மூடப்பட்ட சில கடைகளின் பெயர் உள்ளது. பள்ளிகள், கோவில்கள் அருகே உள்ள கடைகளும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சில கடைகளும், வருவாய் குறைந்த சில கடைகளும் தான் மூடப்படுகின்றன.
undefined
கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் - உரிமையாளர் அதிரடி
தற்போது சில டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது. ஆனால் டாஸ்மாக் ஊழியர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இதனை எல்லாம் அரசு கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கவில்லை என்றால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எதிராகவும் நான் போராட தயாராக உள்ளேன்.
சில டாஸ்மாக் கடைகள் மூலம் மொத்தமாக மது கொள்முதல் செய்யப்படுவதாகவும் மனமகிழ் மன்றங்கள் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதனை அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த முயற்சியினை அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். அதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். வரும் ஜூலை மாதம் 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று பெண்களை வைத்து மது கடைகளுக்கு முன்பு மது பாட்டில் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
கோவையில் பெண் பேருந்து ஓட்டுநரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த எம்பி கனிமொழி
தொடர்ந்து பேசியவர் டாஸ்மாக் கடைகளின் ஒரு லட்சம் கோடி முறை கேடு தொடர்பாக ஆவணங்கள் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். அதன் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணை வேண்டுமென கூறி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும். சினிமா படத்தில் சிகரெட் பிடிப்பது மது குடிப்பது போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்றார்.