தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் ஜூன் 13ம் தேதி கைது செய்யப்பட்ட போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், செந்தில் பாலாஜிக்கு 3 அடைப்பு இருப்பதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் அகற்றப்பட்டதை அடுத்து இயல்பாக சுவாசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் ஜூன் 13ம் தேதி கைது செய்யப்பட்ட போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், செந்தில் பாலாஜிக்கு 3 அடைப்பு இருப்பதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதையும் படிங்க;- உதயநிதி ஸ்டாலினை சாபக்கேடு என்று சொல்கிறா திருமா? எங்கிருந்து வந்தது தைரியம்! நாராயணன் திருப்பதி.!
இதனிடையே, உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், நான்கு இடங்களில் பைபாஸ் கிராஃப்ட் செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க;- செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! பரபரப்பு உத்தரவிட்ட நீதிபதிகள்
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரத்திற்கு பின் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு, இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் இல்லாமல் இயல்பாக சுவாசிப்பதாகவும், சுயநினைவுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.