எதிர்க்கட்சிக் கூட்டம் பீகாரில் துவங்கியது யார் யார் ஆப்சென்ட், பிரசன்ட்?

By Dinesh TG  |  First Published Jun 23, 2023, 12:39 PM IST

வரவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி, பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி, சரத்பவார், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
 


பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவுபெற உள்ள நிலையில், மீண்டும் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகிறது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

அதே வேளையில், பாஜவுக்கு எதிரான கட்சிகள் ஓரணியில் திரண்டு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்னொரு பகுதியாக பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று பாட்னாவில் நண்பகல் 12 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிகார் முதல்வர் நிதிஷ் குமார் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்கிற்றுள்ளனர்.

மேலும்,  ஆம் ஆத்மி சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த்மான், சஞ்செய் சிங் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். அதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி ராஜா, மார்க்சிஸ்ட் லெனினஸ்ட் கட்சி சார்பில் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

Tap to resize

Latest Videos

2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ஊழல்! சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு போச்சு! ஆளுங்கட்சியை அலறவிடும் இபிஎஸ்.!

இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் தேசிய அளவில் உற்றுநோக்கப்படுகிறது. இந்த கூட்டத்தின் மூலம் மக்களவைத் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதுடன், தீர்மானமும் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது.

அதே நேரத்தில், பாரதிய ராஷ்டிரிய சமிதி தலைவரும், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திரா முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிஷா முதல்வரும், பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவரும் நவீன் பட்நாயக், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், பஞ்சாப் சிரோமணி அகாலி தளம், உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசுக்கு நெருக்கடி.? இன்று டெல்லி பறக்கும் ஆளுநர் ரவி..! உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டம்.?
 

click me!