திமுகவிற்கு செக் வைக்கும் மத்திய அரசு.! செந்தில் பாலாஜி நண்பர்கள் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

By Ajmal Khan  |  First Published Jun 23, 2023, 11:09 AM IST

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்களான சக்தி மெஸ் கார்த்திக் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 


செந்தில் பாலாஜி உறவினர்கள் வீட்டில் ஐ.டி ரெய்டு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், வரி ஏய்பு செய்ததாகவும் வந்த புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள், உறவினர்களின் இடங்கள் என 35க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். 8 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் ஒரு சில இடங்களுக்கும்  வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்திருந்தனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

Tap to resize

Latest Videos

மீண்டும் சோதனையை தொடங்கிய ஐ.டி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  இந்தநிலையில் அவருக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில், இன்று காலை முதல் கரூர்-ஈரோடு சாலையில் உள்ள அன்னை அப்பார்ட்மெண்டில் சக்தி மெஸ் கார்த்திக் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற் கொண்டுவருகின்றனர்.

கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்ட போது சக்தி மெஸ் வீடு மற்றும் ஓட்டலில் யாரும் இல்லாத காரணத்தில் சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் சுமார் 25 நாட்களுக்கு பிறகு அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த வருமானவரித்துறை 6 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறைக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 20 மத்திய பாதுகாப்பு படை போலீசார்  அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

திமுக அரசுக்கு நெருக்கடி.? இன்று டெல்லி பறக்கும் ஆளுநர் ரவி..! உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டம்.?

click me!