இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது தான் பதிவேட்டில் இருப்பதாக தெரிவித்துள்ள புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி பொய் தகவலை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
அதிமுக அதிகார போட்டி
இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது தான் பதிவேட்டில் இருப்பதாக தெரிவித்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ்ஆதரவு கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தலைமையில் சேலம், ஈரோடு, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்கள் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, அதிமுகவின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி பொய் பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது தான் பதிவேட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஓபிஎஸ் உடன் நிர்வாகிகள் ஆலோசனை
எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டி தீர்மானத்தை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்பு புதிய பதிவேற்றம் செய்யப்படும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று ஊடகங்களை ஏமாற்றி வருவதாக தெரிவித்ததோடு, இதனை உறுதிப்படுத்தியதால் இன்று பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பதிவேட்டில் உள்ளதை கூறி மகிழ்ச்சி தெரிவித்ததாக கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அவர் இனிமேல் எடப்பாடி பழனிச்சாமி கொடியை பற்றி பேசினால் பொடி பொடியாகி விடுவார் என விமர்சித்தார். அதிமுக தொண்டர்கள் உண்மை நிலையை தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.
அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது.?
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை படி ஊழல்வாதிகளை சேர்க்க மாட்டோம், என கூறும் நீங்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விஜயபாஸ்கர், வேலுமணி, காமராஜ், தங்கமணி, அன்பழகன், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்ட முன்னாள் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு திமுகவின் ஊழல் குறித்து அண்ணாமலை பேசுவதற்கு யோகிதை இல்லை என தெரிவித்தார். ஊழலை எதிர்த்து பேசுவதற்கு ஓபிஎஸ் க்கும் மற்றும் அவரது ஆதரவாளர்களான தங்களுக்கு தான் உள்ளது என கூறினார்.
இதையும் படியுங்கள்
விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆ. ராசாவுக்குக் கேவலமாகத்தான் தெரியும்: அண்ணாமலை பதிலடி