முதல்வருக்கு அடுத்தடுத்து போன் போட்ட பிரதமர் மோடி, அமித்ஷா.. நம்பிக்கை கொடுத்த அந்த ஒற்றை வார்த்தை.

By Ezhilarasan BabuFirst Published Oct 18, 2021, 9:57 AM IST
Highlights

இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி மழை வெள்ள பாதிப்பு குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளார், அப்போது கேரள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என அவர் உறுதியளித்துள்ளார். 

தொடர் கனமழையால் கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என துறை அமைச்சர் அமைச்சர் கூறியுள்ளார். கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. அதனால் அங்கு  நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு மீட்பு பணியில் ஈடுபட ராணுவம், என்.டி.ஆர்.எப்,காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  அமைச்சராக இருந்த 5 ஆண்டில் 60 கோடி சொத்து குவிப்பு.. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், மனைவி மீது FIR.

வெள்ளத்தில் சிக்கி ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண பொருட்களுடன் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஐஎன்எஸ் கருடாவில் இருந்து கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல மீட்பு பணி நடவடிக்கைகளுக்காக எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளன மலப்புறம், எர்ணாகுளம், ஆலப்புழா, திருச்சூர், பத்தனம்திட்டா, பாலக்காடு, கண்ணனூர்,கோட்டையம் ஆகிய இடங்களுக்கு மீட்பு குழுவினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.  

இதையும் படியுங்கள்:  கண்ணில் பட்டதையெல்லாம் விற்பீர்களா.? இது பச்சை தேச துரோகம்.. மத்திய அரசை டாராக்கிய தமிழக எம்.பி.

இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி மழை வெள்ள பாதிப்பு குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளார், அப்போது கேரள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என அவர் உறுதியளித்துள்ளார். அதேபோல பினராய் விஜயனிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் மீட்பு பணிகள் நிவாரணப் பணிகளை செய்வதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

 

click me!