#BREAKING முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திபுதிபுவென நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை.. 43 இடங்களில் சோதனை.!

By vinoth kumarFirst Published Oct 18, 2021, 8:14 AM IST
Highlights

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து வருகிறது. புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். 

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்து குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.

இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து வருகிறது. புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். 

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளாகும் 4வது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.  அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் மனைவி, மகள்கள் மற்றும் தந்தை பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

click me!