இதோ… அடுத்த அட்டாக்….! விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

Published : Oct 18, 2021, 07:52 AM IST
இதோ… அடுத்த அட்டாக்….! விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

சுருக்கம்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற தருணத்தில் கொரோனா ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்தி வந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை தூசி தட்டி வருகிறது.

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது. பணமும், சொத்து குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.

அடுத்த அட்டாக் யாருக்கு என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணத்தில் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கரை குறி வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை களம் இறங்கி இருக்கிறது.

அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் இறங்கி இருக்கின்றனர். அவரது வீடு மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, புதுக்கோட்டை என 43 இடங்களில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்