பட்டப்பகலில் வெட்டி கொலை செய்கின்றனர். ஏடிஎம் கொள்ளை, சங்கிலி பறிப்பு என அனைத்தும் இருக்கிறது. கேட்டால் இது திராவிட மாடல் என்று பெருமை பேசும் திமுக இதைப்பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். இதை அடுத்து பிப்ரவரி 10ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. நீதிமன்றமே சொல்லிவிட்டது இதை தடை செய்ய முடியாது என்று. இருந்தாலும் இவர்கள்தான் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது நீட் தேர்வை ஒழிப்போம், நீட் தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது என்று அவர்கள் தான் சொல்லிக்கொண்டு வருகின்றனர்.
இதை வைத்து அரசியல் செய்தார்கள், ஆட்சிக்கு வந்தார்கள், ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வது தான் என்றும் தெரிவித்தனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. நீட் தேர்வை அவர்களால் ரத்து செய்ய முடியாது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட பயந்து எத்தனையோ கட்சிகள் ஒதுங்கி நின்ற போது தைரியமாக தேர்தலை தேமுதிக எதிர்க்கொண்டு களத்தில் நின்று உள்ளோம்.
இதையும் படிங்க..கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கணவன்.. வீடியோ எடுத்த மனைவி.. என்ன நடந்தது.?
நேர்மையான முறையில் மக்களை சந்தித்துள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதிகள் நடந்தது தேர்தலே அல்ல. இதுவரைக்கும் தமிழ்நாட்டில் நடந்த அத்தனை இடைத்தேர்தலையும் தனியாகவும் கூட்டணியுடனும் சந்தித்த கட்சி தேமுதிக. எல்லா தேர்தலையும் பார்த்துவிட்டு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. ஆனால் இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான அனுபவம். பட்டி அமைத்து ஆடு, மாடுகள் போல மக்களை அடைத்து வைத்து நடந்த தேர்தல். ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான தேர்தல். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ரொம்ப மோசமாக இருந்தது.
தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து ஆதாரத்துடன் மனு கொடுத்தும் தேர்தல் அதிகாரிகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்தனர். பின்னர் எதற்காக இடைத்தேர்தல் நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது? ஈவிகேஎஸ் இளங்கோவனை பல கோடிகள் கொடுத்து வாங்கி உள்ளனர். அவருக்கு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி என்றவுடன் மனதுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.
அவர் முடியவில்லை என்று தெளிவாக கூறும் போது வம்பாக அவரை நிறுத்தி பல கோடிகள் கொட்டி செலவு செய்து முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு தேர்தல் அங்கு நடந்தது. பட்டப்பகலில் வெட்டி கொலை செய்கின்றனர். ஏடிஎம் கொள்ளை, சங்கிலி பறிப்பு என அனைத்தும் இருக்கிறது. கேட்டால் இது திராவிட மாடல் என்று பெருமை பேசும் திமுக இதைப்பற்றி யோசிக்க வேண்டும்” என்று பேசினார்.
இதையும் படிங்க..இரண்டாக பிரியும் ஆப்பிரிக்க கண்டம்.. புதிதாக உருவாகும் கடல் - யாரும் பார்த்திராத அதிசய நிகழ்வு