“ தப்பா முடிவு பண்ணாதீங்க” கர்நாடக வெற்றி குறித்து காங்கிரஸை எச்சரித்த பிரசாந்த் கிஷோர்..

By Ramya S  |  First Published May 17, 2023, 7:30 PM IST

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கட்சி அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு விரிவுப்படுத்த வேண்டாம் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் எச்சரித்துள்ளார்.


பிரசாந்த் கிஷோர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் "கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், மக்களவைத் தேர்தலில் என்ன காத்திருக்கிறது என்பதற்கான குறிப்பிற்காக, சட்டமன்றத் தேர்தல் முடிவை தவறாகப் புரிந்து கொள்ளாமல், கட்சித் தலைவர்கள் மற்றும் கூறினார். தொண்டர்களை எச்சரிக்க விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “ 2013-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

Latest Videos

இதையும் படிங்க : கொளுத்தும் கோடை வெயில்… மின் தடையால் அவதிக்குள்ளான மக்கள்... மின் துறை அமைச்சரின் சூப்பர் தகவல்!!

2012-ல் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது நினைவிருக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 80 இடங்களில் 73 இடங்களைக் கைப்பற்றியது.

2018 சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. இந்த மாநிலங்களில் சில மாதங்களுக்குப் பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத் தேர்தலில் நரேந்திர மோடியின் வெற்றிகரமான பிரச்சாரத்திற்கு வியூக நிபுணராக பணியாற்றியபோது கிஷோர் முக்கியத்துவம் பெற்றார். பின்னர் 2014 தேசிய தேர்தலில் மோடியின் வெற்றிகரமான பிரதமருக்கான முயற்சியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அதன் பின்னர் நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், எம் கே ஸ்டாலின், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மம்தா பானர்ஜி என பலதரப்பட்ட தலைவர்களின் தேர்தல் பிரச்சாரங்களை பிரசாந்த் கிஷோர் கையாண்டுள்ளார்.

2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எந்த கட்சிக்கும் பணியாற்றப் போவதில்லை என்று கூறிய பிரசாந்த் கிஷோர் 'ஜன் சுராஜ்' என்ற பாதை யாத்திரையை தொடங்கினார். பின் தங்கிய மாநிலமாக இருக்கும் பீகாரை நாட்டின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதே இந்த பாதை யாத்திரையின் நோக்கம் என்று பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார். அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அலர்ட்.. இந்த SMS வந்தா நம்ப வேண்டாம்.. உடனே புகார் அளிக்க வேண்டும்.. எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை..

click me!