பாமக.,வின் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் அரசியல் பதற்ற நிலை உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட போவது? பலனடைய போவது யார்?
சென்னை : பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாசை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இனி தானே கட்சியின் தலைவராக இருக்க போவதாகவும் அறிவித்துள்ளார். அன்புமணிக்கு தலைவர் பதவிக்கு பதிலாக, செயல் தலைவர் என்ற புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மோதலுக்கு காரணம் :
சமீபத்தில் நடைபெற்ற பாமக கட்சி கூட்டத்தில், ராமதாசின் பேரன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக ராமதாஸ் அறிவித்த போது மேடையிலேயே அன்புமணி அதை வெளிப்படையாக எதிர்த்தார். ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் அப்போது இருந்தே பகிரங்கமாக வெடிக்க துவங்கி விட்டது. "நான் சொல்லுவதற்கு கட்டுப்பட்டு இருந்தால் இரு; இல்லாவிட்டால் வெளியே போ" என்ற ரீதியில் மேடையிலேயே சொன்னார் ராமதாஸ். கொஞ்சமும் யோசிக்காமல் அதே மேடையில் வைத்து, தான் பனையூரில் புதிய கட்சி அலுவலகம் துவங்க உள்ளதாகவும், இனி அனைவரும் தன்னை அங்கு வந்து சந்திக்கும் படியும் அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார். அப்போதே கட்சியில் இருந்து வெளியேறும், வெளியேற்றும் முடிவுக்கு ராமதாஸ்- அன்புமணி இருவருமே வந்து விட்டார்கள் என்பதை இந்த மோதல் காட்டியது.
மேலும் படிக்க சாட் மசாலா வீட்டிலேயே செய்யலாம்...எப்படி தெரியுமா? - how to make chaat masala at - Asianet News Tamil
அடுத்து என்ன நடக்கும் ?
இருந்தாலும் கட்சி நிர்வாகிகள் சமாதானம் பேசி அமைதிப்படுத்தினார்கள். இந்நிலையில் புகை கொண்டிருந்த விஷயம் மீண்டும் பூதாகரமாகி, அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் முடிவுக்கு வந்து விட்டார் ராமதாஸ். அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளுக்கு அன்புமணியின் தவறான முடிவுகள் தான் காரணம் என ராமதாஸ் அதிருப்தியில் இருந்ததன் வெளிப்பாடாக தான் இந்த பதடி நீக்கம் என சொல்லப்படுகிறது. முகுந்தனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுப்பதற்கு அன்புமணி எதிர்ப்பு கூறி வந்ததால் தான் இந்த நீக்கம் என சிலர் சொல்கிறார்கள். பாஜக-அதிமுக கூட்டணியில் இணைவது தொடர்பாக தந்தை-மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் விளைவு தான் இந்த நீக்கம் என சிலர் சொல்கிறார்கள்.
யாருக்கு பாதிப்பு ?
அன்புமணி, பாமக.,வின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு என்ன காரணமாக இருந்தாலும் ராமதாசின் இந்த முடிவு நிச்சயம் பாமக.,விற்கு மிகப் பெரிய பாதிப்பை கொடுக்கும். காரணமாக ராமதாசின் கண்டிப்பான போக்கை விட, அன்புமணியின் அரவணைத்து செல்லும் போக்கை விரும்புவதால் தான் இளைஞர்கள் பலர் பாமக.,வில் உள்ளனர். இப்போது அன்புமணி கட்சியில் இருந்து வெளியேறினால், நிச்சயம் பெரும்பாலானவர்கள் கட்சியில் இருந்து விலகி, அன்புமணி பக்கம் நிற்பதற்கு வாய்ப்புள்ளது. அதே போல் தேர்தல் சமயத்தில் சுற்றுப் பயணம் செய்து வாக்கு சேகரிக்க, வயது முதிர்வின் காரணமாக ராமதாசால் முடியாது. அன்புமணி அளவிற்கு அளவால் களத்தில் இறங்கி வேலை செய்ய முடியாது என்பதால் அது தொண்டர்களிடம் சோர்வையே ஏற்படுத்தும்.
மேலும் படிக்க வேற லெவல் சுவையில் வேர்க்டலை-புதினா சட்னி செய்யலாமா? - south indian peanut pudina chutney - Asianet News Tamil
யாருடன் கூட்டணி?
அன்புமணியின் நீக்கம் பாமக.,விற்கு மட்டுமல்ல அவர்கள் கூட்டணி சேரும் கட்சிக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடன் தான் பாமக கூட்டணி வைக்க முடியும். அதனால் இந்த இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அது பாமக.,வின் ஓட்டுக்களை கிடைக்க விடாமல் செய்வதால் அதிமுக-பாஜக கூட்டணிக்கு பாமக.,வின் இணைவால் பாதிப்பு தான் ஏற்படும். அதே சமயம், திமுக.,விற்கு தான் இது பலமாக மாறும். அதனால் பாமக மூத்த நிர்வாகிகள் அல்லது அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து சமரசம் பேசி ராமதாஸ்-அன்புமணியை ஒன்றிணைக்க முயற்சி செய்வார்கள்.
அடுத்த நகர்வு எப்படி இருக்கும்?
ஆனால் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாசின் அறிவிப்புக்கு அன்புமணி இதுவரை பதிலளிக்கவில்லை. நிச்சயம் அவர் இந்த முடிவை எதிர்ப்பார். இந்த விவகாரத்தில் அன்புமணி என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்தே இந்த பிரச்சனை எந்த திசையில் செல்லும் என்பது தீர்மானிக்கப்படும். ஒருவேளை இந்த விவகாரம் பெரியதாக மாறும் பட்சத்தில், பாமக ஓட்டுக்கள் மொத்தமாக சிதறி போவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் நிச்சயம் அதிகம் பயனடைய போவது திமுக., தான். ஆனால் அதற்கு அதிமுக, பாஜக கட்சிகள் நிச்சயம் இடம் கொடுக்க வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.