தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலை நீடிப்பாரா அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.
தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை தொடர்வது குறித்து உள்கட்சி ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. தேசியத் தலைமையின் ஒரு பகுதியினர் அண்ணாமலையின் இரண்டாவது பதவிக்கால நீட்டிப்பை ஆதரிக்கும் அதே வேளையில், மாநிலப் பிரிவிற்குள் தலைமை மாற்றத்தை ஆதரிக்கும் பிரிவுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த தமிழக பாஜக தலைவர் யார்?
முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மகிளா மோர்ச்சா தேசியத் தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போன்ற பெயர்கள் இந்த பட்டியலில் உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழக பாஜகவின் தலைமைத்துவ அமைப்பைத் தீர்மானிப்பதில், அக்கட்சியின் உள் அமைப்புத் தேர்தல்கள் மிக முக்கியமானவை ஆகும்.
ரவீந்திரன் துரைசாமி அறிக்கை
தமிழகத்தில் பிரபல பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் உள்ளார் ரவீந்திரன் துரைசாமி. ஊடகத் துறை மற்றும் பத்திரிகைத் துறையில் தொடர்ந்து இயங்கி வரும் ரவீந்திரன் துரைசாமி தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு, “அண்ணாமலை தொடர்ந்து மாநிலத் தலைவராக இருக்க வேண்டும்.
நயினார் நாகேந்திரன் வேண்டாம்
நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டால், நாடார் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் பாஜகவை விட்டு நீங்கலாம் என்பதால், இது கட்சிக்கான ஓட்டு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தும். நாடார் சமூகத்தை பாஜக சுலபமாகக் கைப்பற்றலாம் எனக் கருத முடியாது. அண்ணாமலை தொடர்ந்து பதவியில் நீடித்தால், கட்சியை பாதுகாக்கும் வலுவான தலைவர் ஆவார்.
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்
அவர் அனைத்து சாதிகளிலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர், எனவே அவரின் தலைமையால் கட்சிக்கு நல்ல பலம் சேரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில், மோடி 2029 பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆதரவும் காணப்படுகிறது. ரவீந்திரன் துரைசாமியின் இந்த கருத்து தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இக்கடிதம் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் வரி விதிப்பு: இந்திய ஏற்றுமதியில் என்ன தாக்கம்? முழு லிஸ்ட் இதோ