தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும். - அர்ஜுன் சம்பத் பேட்டி.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், அதேபோல தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறாமல் இருக்க வேண்டுமென்றால் பிரதமர் நரேந்திர மோடி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவையில் போட்டியிட வேண்டும். இந்தியாவில் காசி, இராமேஸ்வரம் இரண்டும் தான் முக்கியம். அதனால் தான் இதை சொல்கிறேன். தமிழகத்தில் பிரதமர் மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்கின்ற கட்சி தான் வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலிமையாக இருக்கிறது. இதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள்.
இதையும் படிங்க..ஜில்லா முதல்வர்.. மெயின்ரோடு புகழ்.! கண்ட்ரோல் இல்லாதவர்கள் - ஜெயக்குமாருக்கு சவால் விட்ட செந்தில் பாலாஜி!
திமுக ஆட்சிக்கு வந்து வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பதை போல மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் பதில் கொடுப்பார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 இடங்களிலும் அதிமுக பிஜேபி கூட்டணி தான் வெற்றி பெறும். திராவிட இயக்கங்களின் ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த ஆட்சி தான் சிறந்த ஆட்சி.
திராவிட இயக்கங்களின் முதல்வராகளிலேயே எம்ஜிஆரை விட, ஜெயலலிதாவை விட, கருணாநிதியை விட, அண்ணாவை விட, சிறந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் மின்சாரம், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் இல்லை. புதுச்சேரி உட்பட தமிழகத்தில் 40 இடங்களிலும் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார்.
இதையும் படிங்க..சர்ச்சைகளின் நாயகன்.. ஜெயலலிதா பற்றிய அவதூறு.. ஈரோடு தேர்தல் அப்டேட்! டிடிவி தினகரன் அதிரடி பேட்டி