திமுகவிடம் காங்., கம்யூ., மதிமுக கட்சிகள் அடிமையாக உள்ளன… எஸ்.பி.வேலுமணி விமர்சனம்!!

By Narendran SFirst Published Jan 6, 2023, 5:55 PM IST
Highlights

திமுக மன்னராட்சி நடத்துவதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார். 

திமுக மன்னராட்சி நடத்துவதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார். கோவையில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, 2 வருடம் ஆகியும் கோவைக்கு, தமிழ்நாட்டுக்கு விடியல் தரவில்லை. எதாவது திட்டம் புதிதாக செய்திருக்கிறார்களா?. 2 வருடத்தில் ஒரு புதிய திட்டமாவது கொண்டு வந்திருக்கிறார்களா? கோவையை முதல்வர் தொடர்ந்து புறக்கணிக்கிறார். கோவையில் அதிக பாலங்கள் தந்தது அதிமுக அரசு. இப்போது நாம் கொண்டு வந்த பால திட்டங்களை மிகவும் மெதுவாக செய்து வருகிறார்கள். பொங்கல் கரும்பு கூட அதிமுக போராட்டத்தால் தான் கிடைக்கிறது. திமுக கையால் ஆகாத அரசு. கோவை மாவட்டதையே அதிமுக மாற்றி அமைத்தது. அதிமுக திட்டங்களின் டெண்டர்களை ரத்து செய்கின்றன. கருணாநிதி இருந்த போது கூட இவ்வளவு பிரச்னைகள் இல்லை. திமுக செய்த ஒரே சாதனை உதயநிதியை அமைச்சராக்கி உள்ளனர்.

இதையும் படிங்க: ஆளுநரின் கருத்துக்கு கமல்ஹாசன் கண்டனம்... வாழ்க தமிழ்நாடு என பல மொழிகளில் டிவீட்!!

மன்னராட்சி நடத்துகின்றனர் திமுக. பெட்டிகளில் போட்டு மனுக்களை வாங்கி சென்றார் ஸ்டாலின். அந்த மனுக்கள் என்ன ஆகின. மக்கள் நேரடியாக கோட்டையில் வந்து பார்க்கலாம் என்றார். இப்போது அது முடியுமா? என்ன திராவிட மாடல்?? 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளனர். பெண்களுக்கு மாதம் 2000 கூறினார்களே. கொடுத்தீர்களா?. சொத்து வரி, மின் கட்டணத்தை பன் மடங்கு ஏற்றி உள்ளனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவர்கள் திமுகவுக்கு அடிமையாகி உள்ளனர். தமிழ் நாட்டில் ஒரே பெரிய கட்சி அதிமுக தான். தைரியம் இருந்தால் திமுக தனித்து நிற்கட்டும். அரசு ஊழியர்கள், தொழில் முனைவோர் யாராவது சந்தோசமாக இருக்கிறார்களா?. நாடாளு மன்ற தேர்தலில் 40 தொகுதிகளிளும் அதிமுக வெல்லும். கஞ்சா விற்பவர்களை பிடிக்காமல் காவல்துறை கைது செய்யாமல் என்ன செய்கிறீர்கள்?. திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கு பாதுகாப்பு இல்லை.

இதையும் படிங்க: சர்ச்சைகளின் நாயகன்.. ஜெயலலிதா பற்றிய அவதூறு.. ஈரோடு தேர்தல் அப்டேட்! டிடிவி தினகரன் அதிரடி பேட்டி

நடுநிலையாக காவல்துறை இருக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் காவல்துறைக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து இருந்தோம். மருந்து கூட முறையாக அளிப்பதில்லை. மருந்து பற்றாக்குறை அதிமுக ஆட்சியில் இருந்தது இல்லை. சொத்து வரி, பால் விலை, மின் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். அதிமுக கொண்டு வந்த பணிகளை முடிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கிராமங்களுக்கு அதிக பேருந்துகள் இருந்தன. இப்போது பல பேருந்துகளை நிறுத்தி விட்டனர். மீடியா விட்டு விட்டால் ஸ்டாலின் ஆட்சி கலைந்து விடும். உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து வெற்றி பெற்றார்கள் என்று தெரிவித்தார். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநரின் கருத்தை நான் பார்க்கவில்லை. எனக்கு தெரியவில்லை. தமிழ் நாட்டில் பெரிய கட்சி அதிமுக தான். 7.5% இட ஒதுக்கீட்டை கொடுத்தவர் எடப்பாடியார் என்று தெரிவித்தார். 

click me!