ஆளுநரின் கருத்துக்கு கமல்ஹாசன் கண்டனம்... வாழ்க தமிழ்நாடு என பல மொழிகளில் டிவீட்!!

Published : Jan 06, 2023, 05:16 PM IST
ஆளுநரின் கருத்துக்கு கமல்ஹாசன் கண்டனம்... வாழ்க தமிழ்நாடு என பல மொழிகளில் டிவீட்!!

சுருக்கம்

தமிழ்நாடு குறித்த ஆளுநரின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு குறித்த ஆளுநரின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக்கொண்டு பேசுகையில், தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வரலாறு பற்றி ஆர்எஸ்எஸ் பிரசாரக்காரருக்கு என்ன தெரியும்? ஆளுநருக்கு வைகோ கடும் கண்டனம்

அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் #தமிழ்நாடு வாழ்க என்று திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் ஆளுநரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆட்சி பீடத்தில் இருந்து சனாதன சக்திகளை அகற்றனும்..! இந்தியா முழுவதும் களம் அமைத்தாக வேண்டும்- திருமாவளவன்

அவரும் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு வாழ்க என்பதை பல்வேறு மொழிகளில் பதிவிட்டுள்ளார். இதுக்குறித்த அவரது பதிவில், #தமிழ்நாடு வாழ்க, #തമിഴ്നാട് വിജയിക്കട്ടെ, #తమిళనాడు వర్ధిల్లాలి, #ತಮಿಳುನಾಡಿಗೆ, ಜಯವಾಗಲಿ, #तमिलनाडु जयहो ।, Long live #TamilNadu, Long live #India என்று குறிப்பிட்டுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு
இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!