ஆட்சி பீடத்தில் இருந்து சனாதன சக்திகளை அகற்றனும்..! இந்தியா முழுவதும் களம் அமைத்தாக வேண்டும்- திருமாவளவன்

Published : Jan 06, 2023, 03:22 PM IST
ஆட்சி பீடத்தில் இருந்து  சனாதன சக்திகளை அகற்றனும்..! இந்தியா முழுவதும் களம் அமைத்தாக வேண்டும்- திருமாவளவன்

சுருக்கம்

தமிழ் தேசியம் பேசுவது பிற்போக்குத்தனமானது என அரசியல் அறியாண்மையால் சிலர் தமிழ் தேசியம் குறித்து பேசி வருவதாக  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

பெரியார், அம்பேத்கர் மீண்டும் தேவை

சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் சார்பில் பிராமணாள் பெயர் அழிப்பு வரலாற்று ஆவண நூல் தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று நூலினை வெளியிட்டார். இந்த விழாவில் பேசிய திருமாவளவன்,  சனாதன சக்திகள் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தியதாகவும் அதனை பெரியாரும் அம்பேத்கரும் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார். காலத்தின் தேவையாக இருப்பதால் பெரியாரும் அம்பேத்கரும் தற்போது தேவைப்படுகிறார்கள் என கூறினார். 75 ஆண்டுகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் எத்தனை தலித்துகள், எத்தனை பழங்குடிகள், எத்தனை பிற்படுத்தப்பட்டோர் வந்திருக்கிறார்கள்? முன்னேறிய சாதிகள் தவிர இன்னும் யாரும் பதவிக்கு வரமுடியவில்லையே. அது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது..! இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்.? காத்திருக்கும் டுவிஸ்ட்

அரசியல் அறியாமை

திராவிட அரசியலை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் பெரியாரை தெலுங்கராகவும், அம்பேத்கரை மராட்டியராகவும் மார்க்ஸை வெளிநாட்டவராகவும் எப்படி பார்க்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். இதைவிட அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது தெரிவித்தவர். இது  பிற்போக்குத்தனமான ஒன்று என கூறினார்.  தமிழ் தேசியம் என்பது திராவிட அரசியலுக்கு எதிரானது என்றும் தமிழ் தேசியம் பிற்போக்கு தன்மையானது அது குறித்து அரசியல் அறியான்மையால் ஒரு சிலர் பேசி வருவதாக குற்றம் சாட்டினார்.

சனாதன சக்திகள் அகற்ற வேண்டும்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சனாதன சக்திகளை ஆட்சி பீடத்திலிருந்து அப்புறப்படுத்துவது வரலாற்று தேவையாக மாறி உள்ளது என குறிப்பிட்ட திருமாவளவன் அதற்காக இந்தியா முழுவதும் களம் அமைக்க வேண்டிய தேவை உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.சுமார் 60 வகை பிராமணர் சாதிகள் இருக்கின்றன. பிராமணர் என்ற ஒற்றை அடையாளத்தோடு பல உட்பிரிவுகளை கொண்டு அவர்கள் செயல்படுகிறார்கள். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை எப்படி எதிரிகளாக சித்திரிப்பது தவறோ, அதேபோல் பிராமணர்களை எதிர்ப்பதும் தவறு நாம் பார்ப்பனியத்தை மட்டுமே எதிர்க்கிறோம் என குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

ஜெயலலிதாவை அவதூறாக விமர்சிப்பதா.?அமைச்சர் பதவிக்கே இழுக்கு! கேகேஎஸ்எஸ்ஆருக்கு நாவடக்கம் தேவை.!- ஓபிஎஸ் ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!