“தேர்தல் வந்தாலே போதும்.. பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் போல ஏறிடும்” கே.எஸ் அழகிரி ஆவேசம் !

By Raghupati RFirst Published Sep 13, 2022, 7:07 PM IST
Highlights

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தலுக்காக மட்டும் மாற்றி அமைக்கப்படுகிறதா ? அல்லது சர்வதேசச் சந்தை விலையின்படி மாற்றியமைக்கப்படுகிறதா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கே.எஸ் அழகிரி.

சர்வதேச சந்தையை அடிப்படையாக கொண்டு, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டாலும் தொடர்ந்து அதிகரிக்கும் விலை சாமான்ய மக்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. அதேபோல தேர்தல்கள் இந்தியாவில் எங்கு நடந்தாலும், உடனே பெட்ரோல், டீசல் விலையானது குறைக்கப்படுகிறது என்பதே எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் குற்றசாட்டு.

மேலும் செய்திகளுக்கு..‘அந்த’ இடத்தில் கைவைத்த பாஜக பொதுச்செயலாளர்.. சசிகலா புஷ்பாவிற்கு நடந்தது என்ன ? சர்ச்சையில் பாஜக!

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'உணவு, காய்கறிகள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 8 ஆண்டுகளாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பலமுனைகளில் பாதிக்கிற வகையில் செயல்பட்டு வருகிற மத்திய பாஜக.

ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருவதையே தலைவர் ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கான ஆதரவு வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தலுக்காக மட்டும் மாற்றி அமைக்கப்படுகிறதா ? அல்லது சர்வதேசச் சந்தை விலையின்படி மாற்றியமைக்கப்படுகிறதா ? 

மேலும் செய்திகளுக்கு..தாயை பிரிந்த குதிரை.. பேருந்தில் உள்ள படத்தை பார்த்து துரத்திய குதிரை - நெகிழ வைத்த காணொளி

கடந்த 7 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும், பணவீக்கம் 6 சதவிகிதமாக இருந்தும், எரிபொருள் விலையைக் குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்க வழி ஏற்படுத்தாதது ஏன் ? பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூபாய் 15, எரிவாயு சிலிண்டர் விலையில் ரூபாய் 150 குறைத்து, நாட்டிலுள்ள நடுத்தர வருவாய் பிரிவு மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் ஆகியோருக்கு உடனே நிவாரணம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்.. பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு ! - பரபரப்பு

click me!