500 கோடி ஊழல்.. ரெய்டுக்கான பின்னணி இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த எஸ்.பி வேலுமணி!

By Raghupati RFirst Published Sep 13, 2022, 6:27 PM IST
Highlights

அதிமுக ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களில் எல்.இ.டி பல்புகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. 

இதற்காக டெண்டர்களில் விதிகள் மீறப்பட்டிருந்தன. சந்தை மதிப்பை விட கூடுதல் விலைக்கு எல்.இ.டி பல்புகளை வாங்கியதில் ரூ500 கோடி ஊழல் நடைபெற்றது என்பது புகார் ஆகும். 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை உள்ளாட்சி அமைப்புகளில் தெருவிளக்குகளை எல்இடி பல்புகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. 

சந்தையில் ஒரு எல்இடி பல்பு ரூ600க்கு விற்பனை செய்யப்படுகிறது. எல்இடி பல்பு பொருத்த டெண்டர் எடுத்த நிறுவனங்களோ ஒரு எல்இடி பல்பின் விலை ரூ 4,500 என வாங்கியதாக கணக்கு காட்டி அரசிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஒரு பல்புக்கு அரசுக்கு ரூ3,900 இழப்பு ஏற்பட்டுள்ளது. மலைக்க வைக்கிற இந்த மகா கொள்ளையில் ஈடுபட்டது சாட்சாத் வேலுமணியின் பினாமி நிறுவனங்கள்தான். 

மேலும் செய்திகளுக்கு..தாயை பிரிந்த குதிரை.. பேருந்தில் உள்ள படத்தை பார்த்து துரத்திய குதிரை - நெகிழ வைத்த காணொளி

மொத்தமாக 3 ஆண்டுகளில் சந்தை விலையை விட மிக மிக அதிகமாக கூடுதல் விலைக்கு எல்இடி பல்புகள் வாங்கியதில் மொத்தம் ரூ500 கோடி ஊழல் நடந்துள்ளது என்பது அம்பலமானது.இது தொடர்பாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக, ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்திடம் புகார் மனு கொடுத்திருந்தது. தற்போது திமுக ஆட்சியில் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது. 

முதல் கட்ட விசாரணையில் எஸ்.பி.வேலுமணி ஊழல் செய்துள்ளார் என்பது உறுதியானதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, அவருக்கு சொந்தமான இடங்கள், நண்பர்கள் வீடுகள், பினாமி நிறுவனங்கள் உள்ளிட்ட 26 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..‘அந்த’ இடத்தில் கைவைத்த பாஜக பொதுச்செயலாளர்.. சசிகலா புஷ்பாவிற்கு நடந்தது என்ன ? சர்ச்சையில் பாஜக!

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'மின்கட்டண உயர்வை திசை திருப்பவே இந்த சோதனை நடப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பர்கள் என்று சிலர் வீட்டில் சோதனை மேற்கொண்டார்கள். ஆனால் அவர்கள் யாரென்றே எனக்கு தெரியாது. சோதனையில் பெரிதாக ஒன்றும் கைப்பற்றப்படவில்லை' என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்.. பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு ! - பரபரப்பு

click me!