‘அந்த’ இடத்தில் கைவைத்த பாஜக பொதுச்செயலாளர்.. சசிகலா புஷ்பாவிற்கு நடந்தது என்ன ? சர்ச்சையில் பாஜக!

By Raghupati R  |  First Published Sep 13, 2022, 4:37 PM IST

தற்போது பாஜக தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழ்நாட்டில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் கடந்த 11 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த இருந்ததால்  மாவட்டம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..“பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்

இதில் திமுக,அதிமுக,பாஜக என எல்லா கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். தற்போது பாஜக தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பாஜக சார்பில் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளா் பொன்.பாலகணபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாநிலச் செயலாளா் அஸ்வத்தாமன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது தான் முகம் சுழிக்க வைக்கும் சம்பவமும் அரங்கேறியது.

கூட்டம் அலைமோதியதால், அந்த இடத்தில் நெரிசலாக இருந்தது. இந்தக் கூட்டத்துக்கு நடுவே முன்னாள் எம்பியும், பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்த வந்தார். அவருக்கு பின் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதியும் வந்தார். அப்போது, அவர் அஞ்சலி செலுத்துவதில் கவனம் செலுத்தாமல், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவை முடி மற்றும் பிற இடங்களில் தடவ முயற்சி செய்திருக்கிறார். சசிகலா புஷ்பா இவ்வளவு சங்கடம் நடந்தாலும், கண்டுகொள்ளாததை போலவே இருந்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..தாயை பிரிந்த குதிரை.. பேருந்தில் உள்ள படத்தை பார்த்து துரத்திய குதிரை - நெகிழ வைத்த காணொளி

ஆனால் எதுவும் நடக்காததை போல பொன்.பாலகணபதி நின்று, சில்மிஷ சேட்டைகளை செய்து கொண்டிருந்தார். தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சர்ச்சை வீடியோவை திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். பல்வேறு கட்சியினர் முதல் பொதுமக்கள் வரை பாஜக கட்சியினரை வெளுத்து வாங்கி வருகிறார்கள். குறிப்பாக பாலியல் ஜல்சா கட்சி என்ற டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு..இந்துக்கள் விபச்சாரிகளா.. திமுக எம்.பி ஆ.ராசா சர்ச்சை பேச்சு.! வலுக்கும் கண்டனங்கள் - முதல்வர் பதில் சொல்வாரா

click me!